குழப்பமான காலத்தில், சுன்னத்திற்கு 100 ஷஹீத் நன்மை
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
என்னுடைய சமுதாயம் சீரழிந்திருக்கும் வேளையில் என்னுடைய வழிமுறையை பின்பற்றுபவனுக்கு நூறு ஷஹீத் (உயிர் தியாகியின்) நன்மை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : அல்காமில் ஃபீ லுஅஃபாயிர்ரிஜால், பாகம் :2, பக்கம் :327)
இதே செய்தி இப்னு பஷ்ரான் அவர்களின் அல்அமாலீ என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள அல்ஹஸன் பின் குதைபா என்பவர் பலவீனமானவராவார்.