குழந்தையைக் கொல்ல முயன்ற குடிகார தந்தை

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

குழந்தையைக் கொல்ல முயன்ற குடிகார தந்தை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வேங்கைபுரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (28). கூலித் தொழில் செய்யும் இவருக்கு அமுதா என்ற மனைவியும் அவந்திகா என்ற 2 வயது குழந்தையும் இருக்கிறார்கள். வேல்முருகன் தினமும் குடித்துவிட்டு வருவது வழக்கம். குடித்துவிட்டு வரும்போதெல்லாம், மனைவியிடம் சண்டையிட்டுக் கொண்டேயிருப்பாராம். இந்நிலையில் சம்பவத்தன்று போதையில் தள்ளாடிக் கொண்டே வந்திருக்கிறார்.

வீட்டிற்கு வந்ததும் வாக்குவாதம், தகராறு என அடிதடி வரை சென்றுள்ளது. வெறி கொண்ட வேல்முருகன் தனது 2 வயது குழந்தையை தரையில் ஓங்கி அடித்தார். வலி தாங்காமல் குழந்தை கத்த, அருகிலுள்ள வீட்டினர் குழந்தையை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். முதலுதவிக்குப் பிறகு குழந்தை தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது.

குழந்தையை அடித்த உடனே தப்பி ஓடிவிட்டான் தந்தை வேல்முருகன். தற்போது மன்னார்குடி போலீசார் தப்பி ஓடிய வேல்முருகனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குடியின் காரணமாகத்தான் இன்று பல குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வந்துள்ளன. அதிகமான சாலை விபத்து, கொலை, கற்பழிப்புக்கு இந்தக் குடிதான் காரணம். இவ்வளவு கொடுமைக்கும் காரணமான இக்குடியைத் தடுக்காத அரசு, இதைத் தடுப்பதற்கு பதிலாக

மக்களின் விவசாய நிலங்களை கைப்பற்றி 8 வழிச்சாலை போடவும், 16 வழிச்சாலை போடவும் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், “எவன் செத்தாலும் பரவாயில்லை எங்களுக்கு வருமானம் தான் முக்கியம்” என்ற எடப்பாடி அரசின் சுயநலம் தான். இதற்கான விளைவை வரும் தேர்தலில், நாம் சந்திப்போம் என்பதை இவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள் போல.

Source : unarvu ( 29/06/2018 )