குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பெயர் வைக்க வேண்டும்?

கேள்வி-பதில்: குழந்தை வளர்ப்பு

குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பெயர் வைக்க வேண்டும்?

பொதுவாக எல்லா விஷயங்களையும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று மார்க்கம் கற்றுத் தந்துள்ளது. இதனடிப்படையில் குழந்தைகளுக்கு அழகிய பெயர்களைச் சூட்ட வேண்டும்.

“நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான்.”

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

(முஸ்லிம்: 147)

«أَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ تَعَالَى عَبْدُ اللَّهِ، وَعَبْدُ الرَّحْمَنِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(அபூதாவூத்: 4949)

எனவே நல்ல பொருள் கொண்ட பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்ட வேண்டும்.