05) குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா? என்பதில் மாறுபட்ட கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன.

‘நாங்கள் இறந்தவரைக் குளிப்பாட்டி விட்டு சிலர் குளிப்பவர்களாகவும், மற்றும் சிலர் குளிக்காதவர்களாகவும் இருந்தோம்’

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(தாரகுத்னீ: 2)/72

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் இது விஷயத்தில் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைத் தான் இப்னு உமர் (ரலி) கூறுகிறார்.

அரபு மூலத்தில் குன்னா (கடந்த காலத்தில் இவ்வாறு இருந்தோம்) என்ற சொல்லை இப்னு உமர் (ரலி) பயன்படுத்தியிருப்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறையைத் தான் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை.

எனவே விரும்பியவர் குளித்துக் கொள்ளலாம். விரும்பாதவர் குளிக்காமலும் இருக்கலாம். இரண்டும் சமமானவை தான்.