06) குர்பானி இறைச்சியை 2 நாட்களுக்கு மேல் சேமிக்க அனுமதி

முக்கிய குறிப்புகள்: நாஸிக் - மன்ஸூக்

இஸ்லாத்தில் ஆரம்பத்தில் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்க தடுக்கப்பட்டிருந்தது. பின்னர்,  நபி (ஸல்) அவர்கள் அதை அனுமதித்தார்கள். பழைய சட்டம் மாற்றப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களை அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள். குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் விரும்பும் நாட்கள்வரை சேமித்துவையுங்கள். பழச்சாறு மதுபானங்கள் ஊற்றிவைக்கப் பயன்படும் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகலாம். ஆனால், போதையூட்டுகின்றவற்றை அருந்தாதீர்கள்.

(முஸ்லிம்: 1778)