குர்ஆன் ஓதி சபையை ஆரம்பிப்பது ஸூன்னத்தா?
கேள்வி-பதில்:
பித்அத்
குர்ஆன் ஓதி சபையை ஆரம்பிப்பது ஸூன்னத்தா?
பதில்
சபையில் பேணப்பட வேண்டிய ஒழுங்கு முறைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். குர்ஆன் ஓதி சபையைத் துவக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஒழுங்கு முறைகளில் ஒன்றாககாட்டித் தரவில்லை. எனவே எந்த சபையையும் குர்ஆன் ஓதி துவக்க வேண்டும் என்பது சுன்னத் அல்ல. இது மக்களாக ஏற்படுத்திக் கொண்ட வழக்கமே தவிர அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த வழிமுறையில் உள்ளதல்ல.