110. குர்ஆனை குறைந்த பட்சம் எத்தனை நாட்களில் முடிக்கலாம்?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

குர்ஆனை குறைந்த பட்சம் எத்தனை நாட்களில் முடிக்கலாம்?

3 நாட்கள்

நபி(ஸல்) அவர்கள் என்னிடம், “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்புநோற்பீராக!” என்று   கூறினார்கள். “இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது!” என்றுநான் கூறினேன். முடிவில், “ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!”என்று கூறினார்கள். மேலும் “ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை(முழுமையாக) ஓதுவீராக!” என்றார்கள். “இதைவிட அதிகமாக(ஓத) எனக்கு சக்திஉள்ளது!” என்று நான் கூறினேன். (நான் கேட்கக் கேட்க) குறைத்துக் கொண்டே வந்துமுடிவில், “மூன்று நாட்களில் ஒரு தடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(புகாரி: 1978)