12) கிரகணத் தொழுகை சட்ட சுருக்கம்
நூல்கள்:
சட்டங்களின் சுருக்கம்
- சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
- (புகாரீ: 1046)
- கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.
- (புகாரி: 5051)
- பள்ளியில் தொழ வேண்டும்.
- (புகாரி: 1046)
- இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.
- (புகாரி: 1046)
- இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்.
- (புகாரி: 1065)
- ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும்.
- (புகாரி: 1046)
- நிலை, ருகூவு, ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும்.
- (புகாரி: 1059)
- கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூற வேண்டும். மேலும் திக்ர் செய்தல், பாவமன்னிப்புத் தேடல், தர்மம் செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும்.
- (புகாரி: 1059)