01) காலுறை மஸஹ் சட்ட சுருக்கம்
நூல்கள்:
சட்டங்களின் சுருக்கம்
- ஆண்களும், பெண்களும் காலுறை அணிந்தால் மஸஹ் செய்யலாம்
- மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்வது மஸஹ் ஆகும்
- நிபந்தனை – உளுவுடன், கால் தூய்மையாக உள்ள நிலையில், காலுறை அணிந்திருக்க வேண்டும்.
- பிறகு உளு முறிந்து உளு செய்யும் போது, கால்களை கழுவாமல் மஸஹ் செய்யலாம்
- மலஜலம் கழித்த பிறகு உளு செய்யும் போதும், கால்களை கழுவாமல் மஸஹ் செய்யலாம்
- அதிகபட்சம் ஒரு நாள் (24 மணி நேரம்) வரை மஸஹ் செய்யலாம்.
- பிரயாணியாக இருந்தால் 3 நாள் வரை செய்யலாம்.
- குளிப்பு கடமையானால், மஸஹ் செய்யமுடியாது,
- மேற்புறத்தில் தான் மஸஹ் செய்ய வேண்டும். அடிப்புறம் கூடாது.