047. காலுறை அணியக்கூடாது என்ற சட்டம் ஆண், பெண் இருவருக்குமா?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
காலுறை அணியக்கூடாது என்ற சட்டம் ஆண், பெண் இருவருக்குமா? அல்லது பெண்கள் காலுறை மற்றும் உள்ளாடை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள், அதுபோல் எதுவும் நபிவழியில் சொல்லப்பட்டுள்ளதா?
செருப்பு கிடைக்காதவர் காலுறை அணிந்து கொள்ளலாம் என்ற சட்டம் ஆண்களுக்கு மட்டுமே! பெண்கள் காலுறை, உள்ளாடைகள் அணிய வேண்டும் என்றோ, அணியக் கூடாது என்றோ எந்த நிபந்தனையும் சொல்லப்படவில்லை. பெண்கள் முகத்திரையும், கையுறையும் அணியக் கூடாது என்று மட்டும் தடை உள்ளது.