காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?(பாடப்புத்தகத்தில் விஷமம்)
காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?(பாடப்புத்தகத்தில் விஷமம்)
என்ன நினைத்தோமோ அது நடந்தே விட்டது. காலம்காலாமாய் சங்பரிவார சக்திகளின் வரலாற்றுத் திரிபு வேலைகள் நடந்து வரும் நிலையில் அதன் உச்சகட்டமாக தற்போது “காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?” என்ற கேள்வி வந்தே விட்டது இந்தியாவில் வாழ்ந்த பல சங்பரிவார் கொள்கை கொண்ட தேச துரோகிகளின் வரலாறுகளை மறைத்து அவர்களை தியாகிகளாக மாற்றி வைத்த சங்பரிவார கும்பல்களின் அடுத்த கட்ட நடவடிக்கை துவங்கி விட்டது.
சாதி வெறியால் ஆஸ்துரையைச் சுட்டு படுகொலை செய்த வாஞ் சிநாதன் வரலாற்றை மாற்றி அவனை சுதந்திரப் போராட்டத் தியாகியாக்கியது போல், வெள்ளயர்களுக்கு சாமரம் வீசிய சவர்க்கரை இந்திய தேசத்தின் பிதாமகன் என்று மாற்றியது போல, இன்னும் இந்திய சுதந்திரத்திற்கு துளியும் தொடர்பி ல்லாதவர்களை யெல்லாம் வீரர்களாக தியாகிகளாக மாற்றியதைப் போல தற்போது தேசத்துரோகி நாதுராம் கோட்சேவை தியாகியாக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
தேசத்துரோகி நாதுராம் கோட்சேவை தியாகியாக்க வேண்டுமானால் காந்தியின் சரித்திரத்தை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு காந்தி கொலையை தற்கொலையாக மாற்றி வரலாற்றை திருத்த வேண்டுமென்ற கனவு அவர்களுக்கு நெடுநாட்களாக உண்டு. அதனை தற்போது நடைமுறைப்படுத்தும் செயலில் இறங்கி விட்டார்கள்.
குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த வாரம் நடைபெற்ற தேர்வில், “காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?” என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தேசத்திற்காக பாடுபட்டு சுதந்திரம் வாங்கித் தந்த காந்தியை அவர் ஒரு முதியவர் என்று கூடப் பாராமல் கொடூரமாக சுட்டு படுகொலை செய்த கோட்சேவுக்கு சிலை வைப்பதும், அவனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதுமான நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என்று மாணவர்களிடம் விச வித்துக்களை விதைக்கும் வேலைகள் துவங்கி விட்டன.
இன்னும் கொஞ்ச நாட்களில் காந்தி ஒரு தேசதுரோகி என்றும் அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தார் என்றும், அவரது தேசவிரோத செயல்களால் கோபமடைந்த சுதந்திரப் போராட்ட தியாகி நாதுராம் கோட்சே என்பவர் தேசத்துரோகி காந்தியை சுட்டுக் கொல்வதற்காக வந்த நேரத்தில் காந்தி தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்தார் என்றும் வரலாற்று சுவடுகளை சங்பரிவார்கள் விரைவில் மாற்றி விடுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
Source: unarvu (அக்டோபர்-18 – 24, 2019.)