காகத்தை உண்ணுவது சம்மந்தமாக வரும் செய்தி

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

காகத்தை உண்ணுவது சம்மந்தமாக வரும் செய்தி

سنن البيهقي الكبرى (9/ 317)

19153 – وأخبرنا أبو عبد الله الحافظ أنبا عبد الله بن جعفر بن درستويه الفارسي ثنا يعقوب بن سفيان الفارسي ثنا إسماعيل بن أبي أويس حدثني أبي عن يحيى بن سعيد عن عمرة بنت عبد الرحمن وعن هشام بن عروة عن عروة عن عائشة رضي الله عنها أنها قالت : إني لأعجب ممن يأكل الغراب وقد أذن رسول الله صلى الله عليه و سلم في قتله للمحرم وسماه فاسقا والله ما هو من الطيبات

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : காகத்தை உண்பவர்களை (எண்ணி) நான் ஆச்சரியப்படுகிறேன். நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமில் உள்ளவருக்கு அதைக் கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கு “ஃபாஸிக்“ தீங்கிழைக்கக்கூடியது என்று பெயரிட்டார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது ”தூய்மையானவைகளில்” உள்ளது அல்ல.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : பைஹகீ குப்ரா-19369, 19153

இதன் அறிவிப்பாளர் தொடரில் ”அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு உவைஸ்“ என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார்.

இப்னு மயீன், அம்ர் பின் அலீ, இப்னுல் மதீனீ, நஸாயீ, அபூஸுர்ஆ, அபூஹாதிம் போன்ற பல அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டு்ளளனர். (தஹ்தீபுல் கமால்)