கழுதைப்புலியாக ஆஸர்
கழுதைப்புலியாக ஆஸர்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம்(அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம்(அலை) அவர்கள், ‘நான் உங்களிடம், எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, ‘இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்’ என்று கூறுவார்.
அப்போது இப்ராஹீம்(அலை) அவர்கள், ‘இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது?’ என்று கேட்பார்கள்.
அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம், ‘நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்)’ என்று பதிலளிப்பான். பிறகு ‘இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பாருங்கள்’ என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில், அது போடப்படும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
எழுப்பப்படும் எதிர்கேள்வி: உலகத்தில் பாவமன்னிப்பு கேட்கக்கூடாது என்று அல்லாஹ் கண்டித்த பிறகு அவர்கள் அவர்கள் திருந்திவிட்டர்கள்.
இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.
இதன் பிறகும் அதே கோரிக்கையை எப்படி திரும்பவும் கேட்பார்கள்?