கழிவறைகளிலும் இனி இன்டர்நெட்
பயான் குறிப்புகள்:
அறிவியல் உண்மைகள்
பீஜிங் நகரில் இலவச வை-ஃபை வசதியுடன்கூடிய நூறு நவீன கழிவறைகளை பீஜிங் மாநகராட்சி அமைக்கிறது.
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் தொடர்ந்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அங்கு இந்த ஆண்டுக்குள் இலவசமாக வை-ஃபை இண்டர்நெட் வசதியுடன் கொண்ட நூறு நவீன கழிவறைகளை அதிகளவில் கட்டுவதற்கு பீஜிங் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, டோங்சோ, பாங்சான் மாவட்டங்களில் முதற்கட்டமாக இந்த வை-ஃபை கழிவறைகள் நிறுவப்படுகிறது.
இதுதவிர, இந்நகரத்தில் ஆங்காங்கே ஏ.டி.எம் இயந்திரங்கள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்துகொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்தித்தர திட்டமிடப்பட்டுள்ளது.