03) கற்பூரம் கலந்து குளிப்பாட்டுதல்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

இவரை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் விரும்பினால் இதை விட அதிகமாக இலந்தை இலை கலந்த தண்ணீரால் கழுவுங்கள். கடைசியில் கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)

(புகாரி: 1253, 1254, 1259, 1261, 1263)

இறந்தவரின் உடல் நன்கு சுத்தமாக வேண்டும் என்பதற்காக சோப் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு இதை ஆதாரமாகக் கொள்ளலாம்.