118. கற்களை எங்கு பொறுக்குவது?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
முஸ்தலிபாவில் தான் கல் பொறுக்கவேண்டும் என்பது சரியானதல்ல என்றாலும், வாய்ப்பு கிடைத்தால் அங்கேயே பொறுக்கி வைத்துக் கொள்வது தவறாகுமா? கற்களை நமக்காக நம்முடனிருக்கும் பிறர் பொறுக்கித் தரலாமா? அவரவர் தான் பொறுக்க வேண்டுமா?
பதில்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹஸ்ஸருக்கு வந்ததும், “ஜம்ராவில் எறிவதற்கு பொடிக் கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். முஹஸ்ஸர் என்பது மினாவாகும்.
இயன்றவர்கள் நபி (ஸல்) அவர்களின் இந்த வழிமுறையைப் பின்பற்றுவது தான் சரியாகும். இயலாதவர்களுக்கு கற்களைப் பொறுக்கிக் கொடுப்பது தவறல்ல.