கப்ரு வணங்கிகளின் குருட்டு வாதங்கள்!

பயான் குறிப்புகள்: கொள்கை

முன்னுரை!

இறந்து விட்ட மனிதரின் மண்ணறைக்கு மேல் இஸ்லாத்தின் பார்வையில் கட்டடம் கட்டுவது கூடாது. அவர்கள் நபிமார்களாகவோ, உயிர்த் தியாகிகளாகவோ இருந்தாலும் சரியே. அவர்களின் கப்ருக்கு மேல் கட்டடம் கட்டுவது முற்றிலும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதைப் பின்வரும் நபிமொழிகளிலிருந்து அறியலாம்.

«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ»

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
கப்ருகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

நூல்: (முஸ்லிம்: 1765) 

عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ قَالَ
قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا ‏مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ

அபுல் ஹய்யாஜ் அல்அசதீ அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!”என்று கூறினார்கள்.

நூல்: (முஸ்லிம்: 1764) 

أَنَّ ثُمَامَةَ بْنَ شُفَيٍّ حَدَّثَهُ قَالَ
كُنَّا مَعَ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ بِأَرْضِ الرُّومِ بِرُودِسَ، فَتُوُفِّيَ صَاحِبٌ لَنَا، فَأَمَرَ فَضَالَةُ بْنُ عُبَيْدٍ بِقَبْرِهِ فَسُوِّيَ، ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَأْمُرُ بِتَسْوِيَتِهَا»

ஸுமாமா பின் ஷுஃபை (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள ‘ரோடிஸ்’ தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், அவரது கப்ரைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ரைத் தரை மட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்” என்று சொன்னார்கள்.

நூல்: (முஸ்லிம்: 1763) 

கப்ரின் மேல் கட்டடம் எழுப்புவதை இந்நபிமொழிகள் வன்மையாகக் கண்டித்து தடை செய்வதை அறிகிறோம்.

நபிமார்கள், நல்லோர்கள் என்று காரணம் கூறி அவர்கள் கப்ரின் மேல் கட்டடம் கட்டுவது நாளடைவில் இணை வைப்பின்பால் கொண்டுசெல்லும் காரணியாகி விடும். யூத, கிறித்தவர்கள் தங்கள் நபிமார்கள் மற்றும் நல்லோர்களின் கப்ரின் மேல் கட்டடம் எழுப்பியேதே அவர்களை இணைவைப்பின் பக்கம் கொண்டு சென்றது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«قَاتَلَ اللَّهُ اليَهُودَ، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ»

“அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! தம் இறைத்தூதர்களின் மண்ணறைகளை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 437) 

எப்படி ஆரம்பித்தது?
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا،
«صَارَتِ الأَوْثَانُ الَّتِي كَانَتْ فِي قَوْمِ نُوحٍ فِي العَرَبِ بَعْدُ أَمَّا وَدٌّ كَانَتْ لِكَلْبٍ بِدَوْمَةِ الجَنْدَلِ، وَأَمَّا سُوَاعٌ كَانَتْ لِهُذَيْلٍ، وَأَمَّا يَغُوثُ فَكَانَتْ لِمُرَادٍ، ثُمَّ لِبَنِي غُطَيْفٍ بِالْجَوْفِ، عِنْدَ سَبَإٍ، وَأَمَّا يَعُوقُ فَكَانَتْ لِهَمْدَانَ، وَأَمَّا نَسْرٌ فَكَانَتْ لِحِمْيَرَ لِآلِ ذِي الكَلاَعِ، أَسْمَاءُ رِجَالٍ صَالِحِينَ مِنْ قَوْمِ نُوحٍ، فَلَمَّا هَلَكُوا أَوْحَى الشَّيْطَانُ إِلَى قَوْمِهِمْ، أَنِ انْصِبُوا إِلَى مَجَالِسِهِمُ الَّتِي كَانُوا يَجْلِسُونَ أَنْصَابًا وَسَمُّوهَا بِأَسْمَائِهِمْ، فَفَعَلُوا، فَلَمْ تُعْبَدْ، حَتَّى إِذَا هَلَكَ أُولَئِكَ وَتَنَسَّخَ العِلْمُ عُبِدَتْ»

வத், சுவா, யகூஸ், யஊக், நஸ்ர் ஆகிய நல்லோர்கள் மரணித்த போது அவர்களது கப்ருகளில் நினைவு சின்னங்களை நிறுவுமாறும், அதிலே அவர்களது பெயர்களை பொறிக்குமாறும் ஷைத்தான் மக்களை தூண்டினான். நாளடைவில் அவர்களை வணங்க தொடங்கினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(நூல்: (புகாரி: 4920))

யூத கிறிஸ்தவ சமுதாயம் வழி தவறிப் போனதற்கு பிரதான காரணம் கப்ரு வணக்கம் தான் என்பதை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். இந்த உலகத்தில் மிகச் சிறந்த மனிதர்களாக, அவ்லியாக்களாக, மகான்களாக திகழ்ந்த நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களுக்கு கப்ரு கட்டி வழிபாடு நடத்தியதால் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளானார்கள்.

அந்த நல்லடியார்களின் கப்ருகளை வணங்குமிடங்களில் (மஸ்ஜிதுகளில்) கட்டிவைத்து வணங்கினார்கள். இதனை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. ஏற்றுக் கொள்ளவுமில்லை. மாறாக நபி (ஸல்) அவர்கள் மூலம் வன்மையாக கண்டித்தான்.

 أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ

لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهُوَ كَذَلِكَ: «لَعْنَةُ اللَّهِ عَلَى اليَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» يُحَذِّرُ مَا صَنَعُوا

நபி (ஸல்) அவர்களின் மரணவேளை நெருங்கிய போது தமது போர்வையை தமது முகத்தின் மீதுபோடுபவர்களாகவும் மூச்சித்தினரும் போது அதை முகத்தை விட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தார்கள்.

இந்நிலையில் அவர்கள் இருக்கும் போது தங்களது நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக (சுஜுது செய்யும் இடங்களாக) எடுத்துக்கொண்ட யூத கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக என கூறி அவர்களுடைய செயலைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (புகாரி: 436) 

جُنْدَبٌ، قَالَ
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ يَمُوتَ بِخَمْسٍ، وَهُوَ يَقُولُ: «إِنِّي أَبْرَأُ إِلَى اللهِ أَنْ يَكُونَ لِي مِنْكُمْ خَلِيلٌ، فَإِنَّ اللهِ تَعَالَى قَدِ اتَّخَذَنِي خَلِيلًا، كَمَا اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلًا، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنْ أُمَّتِي خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا، أَلَا وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِيهِمْ مَسَاجِدَ، أَلَا فَلَا تَتَّخِذُوا الْقُبُورَ مَسَاجِدَ، إِنِّي أَنْهَاكُمْ عَنْ ذَلِكَ»

அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சாலிஹான நல்லடியார்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்டார்கள். எச்சரிக்கையாக இருங்கள்.

நீங்களும் கப்ருகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அதைவிட்டும் உங்களை நான் தடை செய்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூற நான் செவியுற்றேன் என ஜுன்துப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: (முஸ்லிம்: 925) 

இன்று நாட்டில் எத்தனை கப்ருகளை கட்டிவைத்துக் கொண்டு வழிபாடு நடத்துகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் பள்ளிவாசலிலும் ஒரு மகானின் பெயரால் கப்ரை கட்டிவைத்து அதற்குப் பச்சை போர்வை போர்த்தி சந்தனம் பூசி பன்னீர் தெளித்து ஊது பத்தி பற்ற வைத்து சாம்புரானி புகை போட்டு விளக்கேற்றி எண்ணை ஊற்றி கொடி ஏற்றி வழிபாடு நடத்துகிறார்கள். அல்லாஹ்வின் தூதரின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுடைய சாபம் (லஃனத்)தைப் பற்றியும் பயப்படாமல் ஈடுபாடு கொள்கிறார்கள்.

எனவே பள்ளிவாசல்களாக இருந்தாலும் சரி வேறு எந்த இடங்களாக இருந்தாலும் சரி கப்ருகள் கட்டக்கூடாது. கட்டப்பட்ட கப்ருகளை உடைக்க வேண்டும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ்கள் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதரின் கப்ரின் மேலும், கட்டடம் கட்டுவதோ மரியாதை என்ற பெயரில் அதில் வழிபாடு செய்வதோ அறவே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து தெளிவாக அறியலாம்.

ஆனால் கப்ரு வணங்கிகள் எப்படியாவது தங்கள் கப்ர் வழிபாட்டை நியாயப்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இல்லாத செய்திகளை எல்லாம் பரப்பி மக்களைக் குழப்பும் கொடிய வேலையைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சமாதி வழிபாடு என்பது சவக்குழிக்குள் தள்ளப்படும் இக்காலத்தில் அதை எப்படியாவது மீட்டெடுக்கவும், மறு எழுச்சி பெறச்செய்யவும் மும்முரமான முயற்சியில் பரேலவிகள் இறங்கியுள்ளனர்.

நிரந்தர நரகில் தள்ளும் சமாதி வழிபாட்டின்பால் மக்களை அழைக்கும் நாசவேலையை இந்தக் குழப்பவாதிகள் தங்கள் சன்மார்க்க ஏடுகளில் (?) சேவையாகக் கருதி செய்து வருகிறார்கள். அதில் மார்க்கத்தை வளைத்து, இல்லாத கருத்தைத் திணிக்கும் திரிபு வேலையைச் செய்கிறார்கள்.

நபிமார்கள் மற்றும் வலிமார்களின் கப்ருகள் இடிக்கப்பட வேண்டியவை அல்ல; மாறாக கண்ணியப்படுத்தப்பட வேண்டியவை என்ற கருத்தில் கப்ர் வணங்கி ஒருவர் ஒரு கட்டுரையை எழுதி அதில் ஆதாரம் என்ற பெயரில் பல தவறான, அபத்தமான வாதங்களையும் முன்வைத்திருந்தார். அதற்குரிய விளக்கத்தைக் காண்போம்.

நபிமார்கள், அவ்லியாக்கள் அல்லாஹ்வின் சின்னங்களா?

நபிமார்கள், நல்லடியார்கள், மகான்கள் என்போர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களாவர். அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை முஸ்லிம்கள் கண்ணியப்படுத்துவது இறையச்சத்தின் வெளிப்பாடாகும் என இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்.

எனவே அவ்லியாக்களை, மகான்களை நாம் கண்ணியப்படுத்துவது நமது மார்க்கக் கடமை. இதனடிப்படையில் நபிமார்கள், இறந்து விட்ட நல்லடியார்களின் கப்ருகளை அழகாகக் கட்டுவதுதான் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்தும் செயலாகும்.

இவ்வாறு கப்ர் வணங்கிகள் சமாதி வழிபாட்டை சரிகாண துடியாய்த் துடிக்கின்றனர்.

பதில்

இதைப் படிக்கும் போதே இது எவ்வளவு அபத்தமான வாதம் என்பதை அறிவுடையோர் அறிந்து கொள்வார்கள்.

அல்லாஹ்வின் சின்னம் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

ஆனால் அல்லாஹ்வின் சின்னம் எது? என்பதையும் அதை எவ்வாறு கண்ணியப்படுத்தப்பட வேண்டும்? என்பதையும் அல்லாஹ்வும் அவனது தூதரும்தான் கற்றுத்தர வேண்டும்.

ஸஃபா, மர்வா அல்லாஹ்வின் சின்னங்கள் என்றும் அதை கண்ணியப்படுத்தும் முறையையும் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கற்றுத் தந்துள்ளார்கள்.

  اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآٮِٕرِ اللّٰهِۚ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَا ؕ وَمَنْ تَطَوَّعَ خَيْرًا ۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ‏

ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:158)

பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னங்கள் எனவும் அது எவ்வாறு கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் மார்க்கம் கற்றுத் தந்துள்ளது.

  وَالْبُدْنَ جَعَلْنٰهَا لَـكُمْ مِّنْ شَعَآٮِٕرِ اللّٰهِ لَـكُمْ فِيْهَا خَيْرٌ‌ ‌ۖ فَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَيْهَا صَوَآفَّ‌ ۚ فَاِذَا وَجَبَتْ جُنُوْبُهَا فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَـرَّ ‌ؕ كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَـكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

(பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்!

அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.

(அல்குர்ஆன்: 22:36)

எது அல்லாஹ்வின் சின்னம் என்பதை அல்லாஹ்தான் கூற வேண்டுமே தவிர கற்பனையின் அடிப்படையில் முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

ஸஃபா, மர்வா அல்லாஹ்வின் சின்னங்கள் என்று கூறிய இறைவன், ஸயீ செய்வதே அதைக் கண்ணியம் செய்யும் முறை எனவும் கற்றுத் தந்துள்ளான்.

ஸஃபா, மர்வா இரண்டும் அல்லாஹ்வின் சின்னங்கள் என்பதால் அதை வழிபாடு செய்யலாம்; அதனிடத்தில் தேவைகளை முறையிடலாம் என்பதற்கு ஒரு போதும் இது ஆதாரமாகாது.

அதுபோல பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னம் என்று கூறிய அல்லாஹ் அதை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வேண்டும் என்கிறான். இதுதான் அதைக் கண்ணியப்படுத்துவதாகும். பிராணிகளுக்கு தர்கா கட்டுவது அல்ல.

பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னம் என்பதால் அதைக் கண்ணியம் செய்ய வேண்டும். எனவே யாரும் அதை அறுக்கக் கூடாது என்று அறிவுடையோர் வாதிப்பார்களா?

பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னம் என்பதால் அது இறந்த பின் அதை அடக்கம் செய்து அங்கே கட்டடம் கட்டியெழுப்பலாம், வண்ண விளக்குகளால் அதை அலங்கரிக்கலாம், நம் தேவைகளை அந்த பலிப்பிராணியிடம் முறையிடலாம் என்று வாதம் வைத்தால் அது சரியா? அவர்களை மூளையுள்ளவர்கள் என்று யாரும் கருதுவார்களா?

அல்லாஹ்வின் சின்னம் என்பதால் அங்கே கட்டடம் எழுப்பலாம், அங்கே நம் தேவைகளை முறையிடலாம் என்று வாதிடுபவர்களை எந்தப் பட்டியலில் இணைப்போமோ அந்தப் பட்டியலில் தான் இந்த கப்ர் வணங்கிகளைச் சேர்க்க வேண்டும்.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதில் கைதேர்ந்தவர்கள் இந்தக் கப்ர் வணங்கிகள்.

ஸஃபா, மர்வா அல்லாஹ்வின் சின்னங்கள் என்பதற்கும், நபிமார்களுக்கு கப்ர் கட்டலாம் என்பதற்கும் என்ன சம்பந்தம்?

பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னங்கள் என்பதற்கும் அவ்லியாக்களின் கப்ர்களின் மேல் கட்டடம் எழுப்பலாம், அவர்களிடம் தங்கள் தேவைகளை முறையிடலாம், தலை சாய்த்து சஜ்தா செய்யலாம் என்பதற்கும் என்ன சம்பந்தம்?

இதிலிருந்தே தங்கள் மனோ இச்சையை மார்க்கமாக்க இவர்கள் எத்தகைய தில்லுமுல்லு வேலைகளையும் செய்யத் துணிந்தவர்கள் என்பதைக் காணலாம்.

மேலும் ஒன்றை அல்லாஹ்வின் சின்னம் என்று குறிப்பிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த நேரடிச் சான்று இருக்க வேண்டும்.

நபிமார்களோ, இறைநேசர்களோ அல்லாஹ்வின் சின்னங்கள் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. அல்லாஹ்வோ, நபிகள் நாயகமோ அவ்வாறு நமக்குச் சொல்லவுமில்லை. அவ்வாறிருக்க இறைவனின் அதிகாரத்தைக் கையில் எடுக்கும் விதமாக நாமாக முடிவு செய்வது அல்லாஹ்விற்கே அவனது மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் அதிகப் பிரசங்கித்தனமாகும்.

قُلْ اَ تُعَلِّمُوْنَ اللّٰهَ بِدِيْـنِكُمْ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 49:16)

ஒரு வாதத்திற்கு நபிமார்கள் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று இருந்தால் கூட அத்தகைய தூதர்களில் ஒருவரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் கப்ருகள் கட்டுவது கூடாது என்று வன்மையாகத் தடை செய்துள்ளார்கள். கப்ரின் மேல் கட்டடம் எழுப்புவது அல்லாஹ்வின் சாபத்திற்குரிய செயல் என்று எச்சரித்துள்ளார்கள்.

நபிமார்கள் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று நம்பினால் அவர்கள் சொன்னதைப் பின்பற்றுவதுதான் உண்மையில் அவர்களைக் கண்ணியப்படுத்தும் முறையாகும். இதனடிப்படையில் கப்ர்கள் இடிக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நடைமுறைப்படுத்துவது தான் அல்லாஹ்வின் சின்னமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிப்பதாகும்.

இறைத்தூதர்களுக்கும், நல்லடியார்களுக்கும் கப்ர் கட்டுவது, அலங்கரிப்பது அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்தும் செயல்களாக இருந்திருந்தால், அல்லாஹ்வின் தூதர் அதைச் செய்திருப்பார்கள்.

இந்த கப்ர் வணங்கிகளின் வாதப்பிரகாரம் நபிமார்களின் கப்ருகளுக்கு கட்டடம் எழுப்பி, அல்லாஹ்வின் சின்னத்தைக் கண்ணியப்படுத்திய யூதக் கிறித்தவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்திருக்கமாட்டார்கள்.

நபிமார்களின் கப்ரில் கட்டடம் எழுப்பி, அதை அழகுபடுத்துவது இந்தக் குருடர்களின் பார்வையில் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்தும் செயலாக இருந்திருந்தால், நபிமார்களுக்கு சிலை வடிப்பது கப்ர் கட்டுவதையும் விட மேலான கண்ணியம் இல்லையா?

இப்றாஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோருக்கு சிலைகளை வடித்து கண்ணியம் செய்த மக்கத்து இணைவைப்பாளர்களை நபிகள் நாயகம் ஏன் கண்டிக்க வேண்டும்? அந்தச் சிலைகளை ஏன் தகர்க்க வேண்டும்?

இதிலிருந்தே கப்ர் கட்டி வழிபாடு செய்வது அல்லாஹ்வின் சாபத்திற்குரிய யூதக்கிறித்தவ கலாச்சாரம் தான். அது இஸ்லாமியக் கலாச்சாரம் அல்ல என்பதைத் தெளிவாக புரியலாம்.

அல்லாஹ்வின் சின்னம், அதைக் கண்ணியப்படுத்த வேண்டும் என்றெல்லாம் இந்த கப்ர் வணங்கிகள் பிதற்றுவது இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற அக்கறையின் அடிப்படையிலானது அல்ல. முழுக்க முழுக்க தங்கள் மனோஇச்சையை மார்க்கமாக்குவதற்காகத்தான் என்பதை மறந்து விடக்கூடாது.

கப்ரை சீராக்கி, அழகாக்க வேண்டுமாம்!

கப்ர் வழிபாட்டை நியாயப்படுத்த பின்வருமாறு வாதத்தை எழுப்புகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கப்ர் கட்டப்படக் கூடாது, இடிக்க வேண்டும் என்றெல்லாம் கூறவில்லை. மாறாக கப்ரை சீராக்கி, அழகாக்குமாறுதான் நமக்கு உத்தரவிடுகிறார்கள்.

عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ قَالَ
قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا ‏مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ

உயரமான எந்தக் கப்ரையும் அழகுபடுத்தாமல் விட்டு விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் கூறினார்கள். (நபிமொழி)

இதனைத்தான் தவ்ஹீத் கொள்கையில் இருப்பவர்கள் மாற்றி, மறைத்து கப்ர் கட்டப்படக் கூடாது. தரை மட்டத்திற்கு மேல் இருக்கும் கப்ரை இடிக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

உயரமான கப்ர்களைக் கண்டால் சீராக்க வேண்டும் என்ற மேற்கண்ட ஹதீஸில் ஸவ்வா எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இதற்கு அழகுபடுத்தல், சீராக்குதல் என்பதுதான் பொருள். குர்ஆனில் இச்சொல் இடம்பெறும் அனைத்து இடங்களிலும் சீராக்குதல் என்ற பொருளில் தான் வருகிறது. எங்கேயும் இடித்தல் என்ற பொருளில் வரவேயில்லை.

هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:29)

ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِنْ رُوحِهِ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ

பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.

(அல்குர்ஆன்: 32:9)

உதாரணமாக இந்த இடங்களில் எல்லாம் ஸவ்வா என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு இடித்தல் என்று பொருள் செய்யவே இயலாது. அப்படி பொருள் செய்தால் வசனத்தின் கருத்தே அனர்த்தமாகி விடும்.

எனவே உயரமான கப்ருகளைச் சீர்படுத்துமாறுதான் அலீ (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் உத்தரவிட்டுள்ளார்கள். இடிக்குமாறு உத்தரவிடவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தினர் தவறாக பொருள் செய்து கப்ருகளை நபிகள் நாயகம் இடிக்கச் சொன்னார்கள் என்று கூறிவருகிறார்கள்.

பதில்:

இது தான் அவர்களின் மற்றுமொரு வாதமாகும். இதன் மூலம் சமாதி வழிபாட்டை மார்க்க அடிப்படையில் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.

சவ்வா என்ற வார்த்தைக்கு நேரடிப் பொருள் தரைமட்டமாக்குதல் என்பது கிடையாது. சீர்படுத்துதல் என்பதுதான் பொருள். சீர்படுத்துதல் என்பதோடு எதைக் கூறுகிறோமோ அதைக் கவனித்து தான் சவ்வா என்பதற்கு பொருள் செய்ய வேண்டும்.

கிழிந்ததைச் சீர்படுத்துங்கள் என்றால் ஆடையைத் தைக்க வேண்டும் என்பது அர்த்தம். உடைந்ததைச் சீர்படுத்துங்கள் என்றால் ஒட்டுவது என்று அர்த்தம். மேடாக உள்ளதை சீர்படுத்துவது என்றால் சமமாக்குதல் என்று அர்த்தம். பள்ளமாக இருப்பதை சீர்படுத்துதல் என்றால் உயர்த்துவது என்று அர்த்தம்.

எதுவும் கூறாமல் சீர்படுத்துங்கள் என்றால் அழகுபடுத்துங்கள் என்று பொருள். உயரமாக உள்ளதைச் சீர்படுத்து என்று கூறினால் தரைமட்டமாக்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

இதனைப் பின்வரும் ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

 …فَقَالَ أَنَسٌ: فَكَانَ فِيهِ مَا أَقُولُ لَكُمْ قُبُورُ المُشْرِكِينَ، وَفِيهِ خَرِبٌ وَفِيهِ نَخْلٌ، فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورِ المُشْرِكِينَ، فَنُبِشَتْ، ثُمَّ بِالخَرِبِ فَسُوِّيَتْ، وَبِالنَّخْلِ فَقُطِعَ، فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ المَسْجِدِ وَجَعَلُوا عِضَادَتَيْهِ الحِجَارَةَ…

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேட்டுப்பாங்கான பகுதியில் “பனூ அம்ர் பின் அவ்ஃப்’ என்றழைக்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்தாரிடம் இறங்கி, அவர்களிடையே பதினான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாக தமது) வாட்களைத் தொங்கவிட்ட படி வந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்திருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்க, பனூ நஜ்ஜார் கூட்டத்தார் அவர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த (அந்தக் காட்சி)தனை (இப்போதும்) நான் காண்பதைப் போன்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் வாகனம் அபூஅய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கியது. தொழுகை நேரம் தம்மை வந்தடையும் இடத்திலேயே நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்; ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள். –

பிறகு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி பணித்தார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்து வரச் சொல்லி) ஆளனுப்பினார்கள். (அவர்கள் வந்தபோது), “பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்” என்று பதில் (கூறி, அந்தத் தோட்டத்தை) அளித்தனர்.

நான் உங்களிடம் கூறும் கீழ்க்கண்டவை தாம் அ(ந்தத் தோட்டத்)தில் இருந்தன: அதில் இணைவைப்பாளர்களின் சமாதிகள் இருந்தன; அதில் இடிபாடுகள் இருந்தன; சில பேரீச்சை மரங்களும் அதில் இருந்தன.

ஆகவே நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசல் கட்டுவதற்காக அங்குள்ள) சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன. பேரீச்சமரங்களை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்சை மரங்களை வரிசையாக நட்டனர். பள்ளிவாசலின் (கதவின்) இரு நிலைக் கால்களாகக் கல்லை (நட்டு) வைத்தனர். “ரஜ்ஸ்’ எனும் ஒரு வித யாப்பு வகைப் பாடலை பாடிக்கொண்டே அந்தக் கல்லை எடுத்து வரலாயினர்.

(நூல்: (புகாரி: 428)

وَجَعَلُوا يَنْقُلُونَ الصَّخْرَ وَهُمْ يَرْتَجِزُونَ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُمْ، وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ لاَ خَيْرَ إِلَّا خَيْرُ الآخِرَهْ فَاغْفِرْ لِلْأَنْصَارِ وَالمُهَاجِرَهْ»

“இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே (மறுமையின் நன்மைகளுக்காக பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக!”என்று நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு அவர்களுடன் (சேர்ந்து பாறைகளை அப்புறப்படுத்துபவர்களாக) இருந்தார்கள்.

நூல்: (புகாரி: 428) 

இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மஸ்ஜிதுந் நபவி இருந்த இடத்தில் கப்ருகள் இருந்தன எனவும், சின்னஞ்சிறு சுவர்கள் இருந்தன எனவும், அதனைத் தரைமட்டமாக்கத் தான் நபி (ஸல்) அவர்கள் உத்தவிட்டார்கள் எனவும் வந்துள்ளது. இதில் தரைமட்டமாக்க சவ்வா என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு குட்டிச்சுவரை அலங்காரப்படுத்துங்கள் என்று பொருள் செய்ய முடியுமா?

அதுபோலத்தான் கப்ருகளைச் சீர்படுத்துதல் என்பதன் பொருள்.

நபி (ஸல்) அவர்கள் கப்ரு கட்டக்கூடாது என தடை செய்தார்கள். அவர்கள் தடை செய்த ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. மார்க்க அடிப்படையில் அதனைச் சீர்படுத்துங்கள் என்றால் கப்ருகளைத் தரைமட்டமாக்க வேண்டும் என்பது தான் பொருள்.

மேலும் ஸவ்வா என்று குர்ஆனில் இடம்பெறும் அனைத்து இடங்களிலும் அழகுபடுத்தல் என்பது தான் பொருள் எனும் கப்ர் வணங்கிகளின் வாதமும் முற்றிலும் தவறானதாகும்.

கீழ்க்காணும் வசனம் இதனை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

يَوْمَئِذٍ يَوَدُّ الَّذِينَ كَفَرُوا وَعَصَوُا الرَّسُولَ لَوْ تُسَوَّى بِهِمُ الْأَرْضُ وَلَا يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا

(ஏக இறைவனை) மறுத்து, இத்தூதருக்கு மாறு செய்தோர் “தம்மை பூமி விழுங்கி விடாதா?” என்று அந்நாளில் விரும்புவார்கள். அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.

(அல்குர்ஆன்: 4:42)

மேற்கண்ட வசனத்திலும் சவ்வா என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பூமியில் எங்களை அலங்காரமாக வைக்க காஃபிர்கள் விரும்புவார்கள் எனப் பொருள் செய்ய முடியுமா?

எனவே சவ்வா என்பதற்கு, அது எதோடு சேர்ந்து வருகிறதோ அதைக் கவனித்தே பொருள் செய்ய வேண்டும்.

கப்ர் கட்டுவது கூடாது என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிற காரணத்தால் உயரமாகக் கட்டப்பட்ட கப்ரை சமமாக்க வேண்டும் என்பதுதான் இந்த ஹதீஸின் பொருள் என்பதை எளிதாக உணரலாம்.

கப்ர் கட்டுவது கூடாது; ஆனால் கப்ர் கட்டி அதை அழகுபடுத்தலாம் என்று பொருள் செய்தால் அது மார்க்கத்தைக் கேலி செய்யும் விதமாக அமையும். இறைத்தூதரின் வார்த்தைகளில் கேலிப்பொருளுக்கு இடமேயில்லை என்பதை மறந்து விடக்கூடாது.

மேலும் சவ்வா என்ற சொல் இடம் பெற்ற இந்த ஹதீஸுக்கு மட்டும்தான் இப்படி கிறுக்குத்தனமாக உளறுகிறார்கள். கப்ரின் மேல் பூசக் கூடாது என்றும், கப்ரின் மேல் கட்டக்கூடாது என்றும் வரும் ஹதீஸ்களைப் பற்றி வாய் திறப்பதில்லை. கப்ரைக் கட்டக் கூடாது என்றால் கட்டலாம் என்று பொருள். பூசக் கூடாது என்றால் பூசலாம் என்று பொருள் என்று பதில் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கப்ரின் மேல் சாயக்கூடாது என்பதில் கப்ர் கட்ட ஆதாரம் உண்டா?

இன்னொரு சாரார் கப்ர் கட்டுவதற்கு ஹதீஸ்களில் தெளிவான ஆதாரம் உண்டு என்று கூறி அஹ்மதில் இடம்பெறும் ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார்கள்.

அந்தச் செய்தி இதுதான்.

عَنْ عُمَارَةَ بْنِ حَزْمٍ، قَالَ

رَآنِي رَسُولًُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا عَلَى قَبْرٍ.

وَقَالَ فِي مَوْضِعٍ آخَرَ زِيَادُ بْنُ نُعَيْمٍ، أَنَّ ابْنَ حَزْمٍ – إِمَّا عَمْرٌو، وَإِمَّا عُمَارَةُ – قَالَ: رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُتَّكِئٌ عَلَى قَبْرٍ، فَقَالَ: «انْزِلْ مِنَ الْقَبْرِ لَا تُؤْذِي صَاحِبَ الْقَبْرِ، وَلَا يُؤْذِيكَ»

அம்ர் அல்லது உமாரா அவர்கள் கூறுகிறார்கள்:
நான் கப்ரின் மேல் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்தார்கள். அப்போது கப்ரை விட்டு இறங்குவீராக! கப்ரில் உள்ளவருக்கு நோவினை செய்யாதீர் என்று நபிகள் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

நூல்: (அஹ்மத்: 24009)-38 (20934) 

கப்ரின் மேல் சாயக்கூடாது என்று இச்செய்தியில் நபிகள் நாயகம் தடை செய்துள்ளார்கள். சாயும் அளவு கப்ர் கட்டப்பட்டு இருந்தால் தான் அதில் சாய்ந்து கொள்ளவோ அல்லது சாய்ந்து கொள்ளக் கூடாது என்று கூற முடியும்.

எனவே சாயக்கூடாது என்று தடுத்த நபிகள் நாயகம், சாயும் அளவு கப்ர் கட்டடம் கட்டப்பட்டுள்ளதைத் தடுக்கவில்லை. எனவே கப்ரின் மேல் கட்டடம் எழுப்பலாம் என்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாக அமைகின்றது.

இவ்வாறு ஒரு வாதம் எழுப்புகின்றனர்.

பதில்

முதலில் இது ஆதாரப்பூர்வமான செய்தியல்ல. இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.

இந்தச் செய்தி(ஹாகிம்: 6502), ஷரஹ் மஆனில் ஆஸார் 2944 , இன்னும் பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு லஹீஆ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

பார்க்க நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன், பாகம் : 1, பக்கம் : 64, தாரீக் இப்னு மயீன், பாகம் : 1, பக்கம் : 153

எனவே இதை ஆதாரமாக்க் கொண்டு கப்ரைக் கட்டலாம் என்பதை ஒரு போதும் நிறுவ முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ர் உயரமாக இல்லையா?

பரேலவிகள் நரகில் தள்ளும் தர்கா வழிபாட்டை சரிகாண நபிகள் நாயகம் மற்றும் சில நபித்தோழர்களின் கப்ர்கள் உயரமாக இருப்பதை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.

நபிகள் நாயகம் கப்ரின் அமைப்பிற்கும் நபிகளாருக்கும் துளியும் சம்பந்தம் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் இறந்து விட்ட பிறகு அவர்களின் கப்ரை ஒருவர் குறிப்பிட்ட அமைப்பில் அமைப்பதால் அதற்கு நபிகளாரின் அங்கீகாரமோ, இஸ்லாமிய மார்க்கத்தின் அங்கீகாரமோ உண்டு என்பதாகாது.

நபிகள் நாயகம் உயிருடன் உள்ளபோதே இஸ்லாமிய மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது. நபிகளாரின் இறப்பிற்குப் பிறகு நடக்கும் எந்தச் செயலும் இஸ்லாமாகாது.

எனவே கப்ர் தொடர்பாக அல்லாஹ்வின் தூதரின் போதனை என்ன என்பதைத் தான் கவனத்தில் கொள்ள வேண்டுமே தவிர நபிகளாரின் இறப்பிற்குப் பின் நடைபெற்ற, நபியின் தொடர்பு இல்லாத ஏனைய மனிதர்கள் நபிகள் நாயகம் கப்ரை எப்படி அமைத்தார்கள் என்பதை ஆதாரமாகக் குறிப்பிடுவது அறிவீனத்தின் உச்சமாகும்.

நபிகள் நாயகத்தின் கப்ர் எப்படி உள்ளது என்பதற்கு இஸ்லாத்தில் துளியும் கவனிப்பு இல்லை என்பது மிகுந்த கவனத்திற்குரிய விஷயம்.

மேலும் பல ஆதாரப்பூர்வமான செய்திகள் கப்ரின் மேல் கட்டடம் கட்டுவது கூடாது என்று தெளிவாக தடை செய்வதால் நபிகளாரின் கப்ர் கட்டப்பட்டு இருந்தால் கூட அப்போதும் ஆதாரமாகாது.

اَلْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ‌ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏‏

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 5:3)

இமாம்களின் தீர்ப்பு மார்க்க ஆதாரமாகுமா?

இந்தக் கப்ர் வணங்கிகள் கப்ர் தொடர்பான விவகாரத்திற்கு சில மத்ஹபு இமாம்களை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

இவர்கள் செய்யும் மார்க்கத்திற்கு எதிரான பல அனாச்சாரங்களை மத்ஹபு இமாம்களே கண்டித்திருத்தும் அவற்றைக் கொஞ்சம் கூட ஏறிட்டுப் பார்க்காமல் அலட்சியம் செய்து விடுவார்கள். தங்கள் மனஇச்சைக்கு உகந்த விதத்திலோ அல்லது அதன் சாயலிலோ இமாம்கள் கருத்துக்களைக் கூறியிருந்தால் அப்போது மட்டும் இமாம்களின் மீதான பாசம் பொங்கி பீறிட்டு எழும்.

எத்தனை விவகாரங்களில் இவர்கள் தங்கள் மத்ஹபைக் கூட பின்பற்ற மறுக்கிறார்கள். இமாம்களின் கருத்தை மக்களிடம் மறைக்கிறார்கள் என்பதை பி.ஜே அவர்களின் இந்த உரையை கேட்டால் அறிந்து கொள்ளலாம்.

லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஷீஸீறீவீஸீமீஜீழீ.நீஷீனீ/ணீuபீவீஷீ_uக்ஷீணீவீளீணீறீ/sவீக்ஷீவீ்ணீ_uக்ஷீணீவீளீணீறீ/னீணீபீலீணீதீணீவீ_ஜீவீஸீஜீணீtக்ஷீணீtலீ/#.க்ஷிஙீநி-ஸீ9ரிீீளீஷீ

இதிலிருந்து இவர்கள் இமாம்களைப் பின்பற்றுவதாகக் கூறுவது கூட பொய்யே. முழுக்க முழுக்க தங்கள் மனோ இச்சையையும் முன்னோர்களையுமே பின்பற்றுகிறார்கள்.

குர்ஆன், ஹதீஸ் தான் இஸ்லாத்தின் அடிப்படையே தவிர இமாம்களின் விளக்கமோ, அவர்கள் ஹதீஸிற்கு இடும் தலைப்புகளோ இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக ஒரு போதும் அமையாது.

எனவே அந்த இமாம் இவ்வாறு கூறினார்? இந்த இமாம் இவ்வாறு தலைப்பிட்டுள்ளார்? என்றெல்லாம் பிதற்றுவது இவர்களின் வாதத்திற்கு எள் முனையளவும் உதவாது.

இமாம்கள் இடும் தலைப்புகளில் இஸ்லாத்தின் மூச்சு இல்லை. குர்ஆனிலும் ஹதீஸிலும் தான் இஸ்லாத்தின் அடிநாதம் அச்சாரமிட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இமாம்கள் சரியாகத்தான் தலைப்பிட்டுள்ளார்கள். இவர்கள் தான் அதை அரைகுறையாகப் புரிந்து கொண்டு பிதற்றுகிறார்கள்.

இமாம்கள் இச்செய்தியை باب الأمر بتسوية القبر கப்ரை தகர்க்குமாறு அல்லது சமப்படுத்துமாறு கட்டளையிடும் பாடம் என்ற தலைப்பில் தான் கொண்டு வந்துள்ளார்கள்.

(ஸவ்வா என்பதன் பொருளைப் பற்றி மேலே விளக்கியுள்ளோம்.)

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்? என்பார்கள். அதுபோன்று ஸவ்வா என்றாலே அழகுபடுத்துதல் தான் பொருள் என்று கற்பனை செய்து கொண்டு அதன் கோணத்திலேயே இமாம்களின் தலைப்பை அணுகுவதே இவர்களின் இந்தக் கோளாறுக்கு மூல காரணமாகும்.

ஒரு சாண் அளவு கப்ரை உயர்த்தலாம் என்று இமாம் நவவீ அவர்கள் கூறிய கூற்றில் ஏதோ கப்ர் கட்ட ஆதாரம் இருக்கிறது என்றெண்ணியவர்கள் அதே நவவீ அவர்கள் தனது மின்ஹாஜ் எனும் நூலில் நேரடியாக கப்ர் கட்டுவது பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்க தவறிவிட்டார்கள்.

منهاج الطالبين وعمدة المفتين – (1 / 85‏)
وَيُكْرَهُ تَجْصِيصُ الْقَبْرِ وَالْبِنَاءُ وَالْكِتَابَةُ عَلَيْهِ. وَلَوْ بُنِيَ فِي مَقْبَرَةٍ مُسَبَّلَةٍ هُدِمَ.

கப்ரை பூசுவது, கட்டடம் எழுப்புவது அதன் மீது எழுதுவது ஆகியவை வெறுப்பிற்குரியாதாகும். தனிப்பட்ட ஒருவரின் கப்ரின் மீது கட்டடம் கட்டப்பட்டிருந்தால் அது இடிக்கப்படவேண்டும். 

மின்ஹாஜூத் தாலிபீன், பாகம் 1, பக் 85

கப்ர் கட்டுவது வெறுப்பிற்குரியது என்று தெளிவாக தனது நூலில் குறிப்பிடுகின்றார்.

அத்தகைய நவவீ இமாம் அவர்கள் மண்ணறை ஒரு சாண் அளவு தரையிலிருந்து உயர்த்திக் கொள்ளலாம் என்று கூறியதை ஏதோ கப்ரின் மேல் கட்டடம் எழுப்பலாம் என்று கூறியது போல் ஜோடனை செய்து மக்களிடம் பரப்புகிறார்கள் என்றால் இவர்கள் எத்தகைய கடைந்தெடுத்த கயவர்கள் என்பதை சொல்லிப் புரிய வேண்டியதில்லை.

மேலும் மற்றுமொரு முக்கிய மத்ஹபு இமாம், அபூஹனிஃபா அவர்கள் கூறியதையும் பாருங்கள்.

حاشية رد المختار على الدر المختار – (2 / 237)
وعن أبي حنيفة يكره أن يبنى عليه بناء من بيت أو قبة أو نحو ذلك لما روى جابر نهى رسول الله عن تجصيص القبور وأن يكتب عليها وأن يبنى عليها رواه ‏مسلم وغيره

அபூஹனிஃபா கூறுகிறார்: கப்ரின் மீது கட்டடம், குப்பா போன்றவைகளைக் கட்டுவது வெறுப்பிற்குரியதாகும். ஏனெனில் நபிகள் நாயகம் கப்ர்களை பூசுவதையும், அதன் மீது எழுதுவதையும் அதன் மேல் கட்டடம் கட்டுவதையும் தடை செய்துள்ளார்கள்.

ரத்துல் முக்தார், பாகம்: 2, பக்: 237

இப்படி தங்கள் மனோ இச்சைக்குத் தகுந்த படி இமாம்களின் கூற்றை வளைக்கிறார்கள் எனில் இவர்களிடம் சத்தியம் இருக்குமா என்பதையும் இவர்கள் இமாம்களைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொள்வதில் உண்மையுன்டா என்பதையும் நியாயவான்கள் சிந்திக்க வேண்டும்.

ஒரு வேளை இவர்கள் கூறுவதைப் போலவே கப்ர் மீது கட்டடம் எழுப்பலாம் என்று அந்த இமாம்கள் கூறினால் கூட நாம் பின்பற்ற வேண்டியது வஹீ எனும் இறைச்செய்தி அருளப் பெற்ற அல்லாஹ்வின் தூதரைத் தானே தவிர இமாம்களை அல்ல என்பதை நினைவில் கொள்க.

ஜியாரத் செய்வது தவறா?

ஜியாரத் செய்வது தவறில்லை தான். மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ
زَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ، فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ، فَقَالَ: «اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِي، وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي، فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தாயாரின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்த போது அழுதார்கள். அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அபோது அவர்கள் என் தாயாருக்காக பாவ மன்னிப்பு தேட நான் என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. என் தாயாரின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்ய அனுமதி கேட்டேன். அதற்கு அல்லாஹ் அனுமதித்தான். எனவே நீங்களும் கப்ரை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனின் அது மரணத்தை நினைவுபடுத்தும் என்று கூறினார்கள்.

நூல்: (முஸ்லிம்: 1777) (1622)

நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் பொதுவாக அனுமதித்தவைகளை பொதுவாகவும் குறிப்பாக அனுமதித்தவைகளை குறிப்பாகவும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கப்ரு ஸியாரத்தைப் பொருத்தவரை அது பொதுவாக அனுமதிக்கப்படவில்லை. மரணத்தை நினைவு படுத்தும் என்ற காரணத்துடன் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுவான அடக்கத்தலங்கள் மரணத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன. ஆனால் தர்காக்கள் மரணத்தை நினைவுபடுத்துவதற்குப் பதிலாக மரணத்தை மறக்கடிக்கச் செய்யும் வகையில் தான் உள்ளன. எனவே அவ்லியாக்கள் எனப்படுவோரின் கப்ருகளை ஸியாரத் செய்யக் கூடாது.

 

“புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்” என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். “அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் “இல்லை’ என்றார். “இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது “இல்லை’ என்றார். அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)
நூல்: (அபூதாவூத்: 3313) (2881) 

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே “இணைவைப்பாளர்களின் வழிபாடு, திருவிழா போன்றவை இருக்கக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.

ஸியாரத் கட்டாயக் கடமை இல்லை. அது ஒரு சுன்னத் தான். இந்த சுன்னத்தை நிறைவேற்ற இணை வைப்பவர்களின் வழிபாடும், திருவிழாவும் நடக்கும் இடத்திற்கு எப்படிச் செல்ல முடியும்?

மரணத்தை நினைவுபடுத்தவே ஸியாரத் அனுமதிக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அவ்லியாக்கள் எனப்படுவோரின் அடக்கத்தலத்தில்

பிரம்மாண்டமான கட்டிடம்

மனதை மயக்கும் நறுமணம்

கண்களைப் பறிக்கும் அலங்காரங்கள்

ஆண்களும் பெண்களும் கலப்பதால் ஏற்படும் கிளுகிளுப்பு

ஆடல், பாடல், கச்சேரிகள்

இவற்றுக்கிடையே மறுமையின் நினைவும், மரணத்தின் நினைவும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது.

எந்தக் காரணத்திற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதித்தார்களோ அந்தக் காரணமே இல்லாத போது இதை எப்படி அனுமதிக்க முடியும்?

  • விழுந்து கும்பிடுவது
  • கையேந்திப் பிரார்த்திப்பது
  • பாத்தியா என்று மக்களை ஏமாற்றுதல்
  • தலையில் செருப்பைத் தூக்கி வைத்தல்
  • விபூதி, சாம்பல் கொடுத்தல்
  • மார்க்கம் தடை செய்த கட்டடம்

என்று ஏராளமான தீமைகளை தர்காக்கள் உள்ளடக்கியுள்ளன.

مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ

தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: (முஸ்லிம்: 78) 

அங்கே செல்பவர்கள் தமது கைகளால் அத்தீமைகளைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயலாவிட்டால் நாவால் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இவ்வாறு நடக்கத் துணிவு உள்ளவர்கள் இந்த இரண்டு வழிகளிலும் அதைத் தடுக்கலாம். அதற்கும் இயலாதவர்கள் மனதால் வெறுத்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தக் காரணங்களாலும் தர்காக்களுக்கு ஸியாரத் செய்வதற்காகச் செல்லக் கூடாது.

பொது கப்ருஸ்தான்களுக்குச் சென்று மரணத்தையும், மறுமையையும் நினைவுபடுத்திக் கொள்வதே சுன்னத்தாகும்.

மறுமையை நினைவுபடுத்திட, ஒவ்வொரு ஊரிலும் எளிமையான கப்ர்ஸ்தான் இருக்கும் போது, செலவும் சிரமமுமில்லாமல் இந்த சுன்னத்தை நிறைவேற்றி அதன் நன்மையை அடைய வழி இருக்கும் போது, தர்காக்களை நாடிச் செல்ல எந்த நியாயமும் இல்லை.

எனவே மறுமையை நாசமாக்கும் கப்ரு வணக்கத்தை விட்டொழிப்போம்!