கட்டுப்படுவோம்! முழுமையாக பின்பற்றுவோம்!
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!
அதிகமான முஸ்லிம்கள், அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டதற்கு மாற்றமாக இருக்கிற அநேகமான காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். காரணம், அவர்கள் அழகிய மார்க்கத்தின் அடிப்படையை அறியாமல் இருப்பதுதான். அதேசமயம், தவறிழைக்கின்ற முஸ்லிம்கள்
அனைவரும் மார்க்கத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள்’ என்று பொதுவாக கருத்தைத் தெரிவித்துவிட்டு ஒதுங்கி சென்றுவிடமுடியாது. காரணம், கட்டுக்கோப்பான மார்க்கத்தின் கோட்பாடுகளைப் பற்றி தெரிந்திருந்தும் அதன் கட்டளைகளுக்குக் கட்டுப்படாமல் வாழ்கின்ற முஸ்லிம்களை கண்கூடாகக் காண்கிறோம்.
மார்க்கத்திலே மொழியப்பட்டுள்ள முக்கியமான விஷயங்கள் எவை? எவை ஹராம்? எவை ஹலால்? முஸ்முடைய முதன்மையான பண்புகள் என்ன? என்பதையெல்லாம் இவர்கள் அறிந்துள்ளார்கள். ஆயினும், மகத்தான மார்க்கத்திற்கு தோதுவாக தங்களைத் திருத்திக்கொள்வதற்கு பதிலாக, தங்களின் சுயவிருப்பத்திற்கு சார்பாக மார்க்க போதனைகளை மாற்றி, வளைத்து, திரித்து பின்பற்றுபவர்களாக இருக்கின்றார்கள்.
இத்தகையவர்கள், சன்மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ள கடமையான செயல்களில் சிலதை மட்டும் செயல்படுத்திவிட்டு, மற்றவைகளை மற்றவர்களின் விமர்சனத் திற்கு, எதிர்ப்புக்கு பயந்து நிராகரித்து விடுகிறார்கள். அதுபோலவே தடுக்கப்பட்டுள்ள காரியங்களில் சிலதைவிட்டும் விலகிவிட்டு, அவற்றில் சிலவற்றை பதவி, காசு பணம் போன்ற உலக நலனுக்காக சுயநலத்துக்காக கண்மூடித்தனமாக செய்துகொண்டிருக்கிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், மார்க்கச் செய்திகளில் தங்களின் சுயவிருப்பத்திற்கு சாதகமாக இருக்கிற சிலதை செயல்படுத்திவிட்டு, தங்களின் கருத்துக்கும் கயமைத்தனத்துக்கும் பாதகமாக, எதிராக தெரிவதை மறுப்பவர்களாக புறக் கணிப்பவர்களாக இருக்கின்றார்கள். இந்த தன்மை இருப்பதால், தீனில் தெரிந்தே தவறிழைப்பவர்களாக, தடம்புரளக்கூடியவர்களாக மாறிவிடுகிறார்கள்.
ஆகவே, இத்தகைய தன்மை ஒரு முஸ்லிமிடத்தில் இருக்கலாமா? எந்த மக்கள் இந்த மோசமான பண்பினை வைத்திருந்தார்கள்? இவ்வாறு நடந்துகொண்டவர்கள் எந்நிலையை சந்தித்தார்கள்? என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பனீ இஸ்ராயீல்களின் பண்பு :
இஸ்ராயீல் என்று குறிப்பிடப்படுகிற யஃகூப் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களுக்கு பனீஇஸ்ராயீல்கள் என்று பெயர். பனீஇஸ்ராயீல்களில் இருந்து அல்லாஹ் பல தூதர்களை அனுப்பினான். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் உள்ளவர்கள்தான், மூஸா (அலை) மற்றும் ஈஸா (அலை) அவர்கள். இவ்வாறாக முன்சென்ற சமுதாயங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் யார் யார்? அந்த சமுதாய மக்கள் சத்தியத்தை அறிந்து கொள்வதற்கு முன்னாலும், அறிந்து கொள்கின்ற போதும், அறிந்த பிறகும் எவ்வாறு நடந்துகொண்டார்கள்? என்பதை அல்லாஹ் தனது திருமறையில் தெரிவித்துள்ளான். இதன்மூலம் பனீஇஸ்ராயீல் சமுதாயத்தின் செயல்பாடுகளை படிக்கும்போது, அந்த சமுதாய மக்களில் இறைவனின் கோபத்தை சம்பாதித்தவர்கள், அவனின் தண்டனையை தேடிக்கொண்டவர்கள், தங்களின் திருத்தூதருக்கு மாறுசெய்தவர்களெல்லாம் இந்த பண்பினைப் பெற்றிருந்தார்கள் என்ற பேருண்மையை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இதற்கான ஆதாரங்களை காண்போம்.
لَقَدْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَاَرْسَلْنَاۤ اِلَيْهِمْ رُسُلًا ؕ كُلَّمَا جَآءَهُمْ رَسُوْلٌ ۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُهُمْۙ فَرِيْقًا كَذَّبُوْا وَفَرِيْقًا يَّقْتُلُوْنَ
இஸ்ராயீலின் மக்களிடம் உறுதி மொழி எடுத்தோம். அவர்களிடம் தூதர்களையும் அனுப்பினோம். அவர்கள் விரும்பாததைத் தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம் சிலரைப் பொய்யர் என்றனர். மற்றும் சிலரைக் கொன்றனர்.
وَلَقَدْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ بَنِىْۤ اِسْرآءِيْلَۚ وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَىْ عَشَرَ نَقِيْبًا ؕ وَقَالَ اللّٰهُ اِنِّىْ مَعَكُمْؕ لَٮِٕنْ اَقَمْتُمُ الصَّلٰوةَ وَاٰتَيْتُمُ الزَّكٰوةَ وَاٰمَنْتُمْ بِرُسُلِىْ وَعَزَّرْتُمُوْهُمْ وَاَقْرَضْتُمُ اللّٰهَ قَرْضًا حَسَنًا لَّاُكَفِّرَنَّ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَلَاُدْخِلَـنَّكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۚ فَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِيْلِ فَبِمَا نَقْضِهِمْ مِّيْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِيَةً ۚ يُحَرِّفُوْنَ الْـكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖۙ وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰى خَآٮِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்தான். அவர் களில் தேர்வு செய்யப்பட்ட பன்னிரண்டு பேரை அனுப்பினோம். “நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, எனது தூதர்களையும் நம்பி, அவர்களுக்கு உதவியாக இருந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனையும் கொடுப்பீர்களானால் உங்கள் தீமைகளை உங்களை விட்டும் அழிப்பேன். உங்களை சொர்க்கச் சோலைகளிலும் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். “உங்களில் இதன் பிறகு (என்னை) மறுத்தவர் நேரான வழியிலிருந்துவிலகிவிட்டார்” என்று அல்லாஹ் கூறினான். அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறித்ததால் அவர்களைச் சபித்தோம். அவர்களின் உள்ளங்களை இறுக்கமாக்கினோம். வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் துரோகத்தை நீர் பார்த்துக் கொண்டே இருப்பீர். ஆகவே அவர்களைக் கண்டு கொள்ளாது அலட்சியப்படுத்துவீராக! அல்லாஹ் நன்மை செய்வோரை விரும்புகிறான்.
(அல்குர்ஆன்:) ➚,13)
பனீஇஸ்ராயீல் சமுதாயத்தை சார்ந்த சிலர், தங்களின் மனோஇச்சைக்கு மனவிருப்பத்துக்கு மாறுபட்டதாக இருப்பதை தூதர்கள் கொண்டுவரும்போது அத்தூதர்களையே கொலைசெய்கின்ற கொலைகாரர்களாக, மாபாதகர்களாக இருந்தார்கள். இவ்வாறு தங்களுக்கு தோதுவாக மார்க்கத்தின் போதனைகளை எதிர்ப்பார்த்ததின் விளைவாகவே அவற்றில் சிலதை மட்டும் எடுத்துக்கொண்டு, சிலதை ஏறெடுத்தும் பார்க்காதவர்களாக இருந்தார்கள். இதை முன்சென்ற வசனங்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, அந்த வகையிலே அவர்கள் அலட்சியப்படுத்திய காரியங்களையும் அல்லாஹ் அருள்மறையில் அறிவித்திருக்கிறான்.
அவற்றைக் காண்போம்.
“அல்லாஹ்வைத்தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்” என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள். “உங்கள் இரத்தங்களை ஓட்டிக் கொள்ளாதீர்கள்! உங்கள் வீடுகளிலிருந்து உங்களை (சேர்ந்தோரை) வெளியேற்றாதீர்கள்!” என்று உங்களிடம் உறுதிமொழி எடுத்த போது, நீங்களே சாட்சிகளாக இருந்து ஏற்றீர்கள். பின்னர் நீங்கள் உங்களைக் கொலைசெய்தீர்கள். உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும், வரம்பு மீறலும் உதவிக் கொண்டீர்கள்! உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத் தொகை பெற்றுக்கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீட்டிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.
(அல்குர்ஆன்:) ➚, 84, 85)
பனீஇஸ்ராயில்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்ட வேதத்திலே, கைதிகளிடம் ஈட்டுத்தொகையை பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் உரிமையாளர்களை வெளியேற்றா தீர்கள்’ என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அவற்றில் ஒன்றுக்கு மட்டும் கட்டுப்பட்டுவிட்டு மற்றொன்றுக்கு கட்டுப்படாமல் இருந்தார்கள், வரம்புமீறினார்கள். கைதிகளிடம் ஈட்டுத்தொகையை பெற்றுகொள்ளலாம் என்பதை ஏற்று நடைமுறைப்படுத்திய அவர்கள், வீட்டின் உரிமையாளர்களை விரட்டக்கூடாது என்ற வேதவரிகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இந்த காரியத்தை அல்லாஹ் கடுமையாக கண்டிக்கிறான். ஆகவே, இவ்வாறு வேதத்தில் சிலதை மட்டும் ஏற்றுக்கொண்டு சிலதை மறுக்கின்ற மதிகெட்ட தன்மையை, அரைகுறை நிலைபாட்டினை விட்டும் நாம் விலகிக்கொள்ளவேண்டும். மார்க்கத்தை முழுமையாக பின்பற்றும் முஸ்லிம்களாக மாறவேண்டும்.
வேதக்காரர்களின் பண்பு :
முன்னால் வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயங்களான யூதர்களும் கிறிஸ்தவர்களும் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்தார்கள்.
அல்லாஹ் அவர்களை வேதக்காரர்கள் என்று அடையாளப்படுத்தி,அவர்கள் சம்பந்தமாக அதிகமான வசனங்களை அருளியுள்ளான்.
அந்த வேதக்காரர்களிடம் குடிகொண்டிருந்த செயல்பாடுகளைப் பற்றி அறிவித்துள்ளான். அதன்படி, அந்த வேதக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கிற சிலதை மட்டும் ஏற்றுகொள்வது, மற்ற சிலதை நிரகாரிப்பது என்ற மாபாதகமான மோசமான பண்பினை பெற்றிருந்ததால்தான், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேதத்தின் கட்டளைகளுக்கு கட்டுப்படாதவர்களாக இருந்து, இறுதிவேதமான திருக்குர்ஆனின் போதனைகளை புறக் கணிப்பவர்களாகவும் ஏகஇறைவனுக்கு மாறுசெய்பவர்களாகவும் நபிகளாரை பின்பற்ற மறுப்பவர்களாகவும் வாழ்ந்தார்கள். இதற்கான சான்றுகளைக் காண்போம்.
يٰۤـاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُـنَا يُبَيِّنُ لَـكُمْ كَثِيْرًا مِّمَّا كُنْتُمْ تُخْفُوْنَ مِنَ الْكِتٰبِ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍ ؕ قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِيْنٌ ۙ
வேதமுடையோரே! நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களிடம் வந்து விட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். பலவற்றை அலட்சியம் செய்துவிடுவார். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன.
وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَفْرَحُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَيْكَ وَمِنَ الْاَحْزَابِ مَنْ يُّـنْكِرُ بَعْضَهٗؕ قُلْ اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ وَلَاۤ اُشْرِكَ بِهٖؕ اِلَيْهِ اَدْعُوْا وَاِلَيْهِ مَاٰبِ
(முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் உமக்கு அருளப்பட்டதில் மகிழ்ச்சியடைகின்றனர். அதில் சிலவற்றை மறுப்போரும் அக்கூட்டங்களில் உள்ளனர். “அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். மீளுதலும் அவனிடமே உள்ளது” என்று கூறுவீராக!
யூதர்களின் பண்பு :
குறிப்பிட்டு சொன்னால், இந்த மோசமான பண்பில் ஊறிப்போனவர்களாக யூதர்கள் இருந்தார்கள். இதை பின்வரும் வசனங்களின் வாயிலாக விளங்கிக்கொள்ளலாம். “மூஸா (அலை) அவர்களை தூதராக நம்பிக்கை கொண்டோம்; அவர்களுக்கு அருளப்பட்ட தவ்ராத் வேதத்தை பின்பற்றுகிறோம்” என்று சொல்லக்கூடிய யூதர்கள் தங்களுடைய இந்த கூற்றில் உண்மையானவர்களாக இருக்கவில்லை. அவர்கள் மார்க்கத்தின் சட்டதிட்டங்களை தங்களுக்கு தோதுவாக மறைக்கக்கூடிய மாற்றக்கூடிய மறுக்ககூடிய வேலைகளை செய்தார்கள்.
يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ لَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِ مِنَ الَّذِيْنَ قَالُوْۤا اٰمَنَّا بِاَ فْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوْبُهُمْ ۛۚ وَمِنَ الَّذِيْنَ هَادُوْا ۛۚ سَمّٰعُوْنَ لِلْكَذِبِ سَمّٰعُوْنَ لِقَوْمٍ اٰخَرِيْنَۙ لَمْ يَاْتُوْكَؕ يُحَرِّفُوْنَ الْـكَلِمَ مِنْۢ بَعْدِ مَوَاضِعِهٖۚ يَقُوْلُوْنَ اِنْ اُوْتِيْتُمْ هٰذَا فَخُذُوْهُ وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوْا ؕ وَمَنْ يُّرِدِ اللّٰهُ فِتْنَـتَهٗ فَلَنْ تَمْلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَيْــًٔـاؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَمْ يُرِدِ اللّٰهُ اَنْ يُّطَهِّرَ قُلُوْبَهُمْ ؕ لَهُمْ فِىْ الدُّنْيَا خِزْىٌ ۚۖ وَّلَهُمْ فِىْ الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ
நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே! கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். “அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது (சாதகமானது) கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!” என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும்வேதனை உண்டு.
وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۤ اِذْ قَالُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰى بَشَرٍ مِّنْ شَىْءٍ ؕ قُلْ مَنْ اَنْزَلَ الْـكِتٰبَ الَّذِىْ جَآءَ بِهٖ مُوْسٰى نُوْرًا وَّ هُدًى لِّلنَّاسِ تَجْعَلُوْنَهٗ قَرَاطِيْسَ تُبْدُوْنَهَا وَتُخْفُوْنَ كَثِيْرًا ۚ وَعُلِّمْتُمْ مَّا لَمْ تَعْلَمُوْۤا اَنْتُمْ وَلَاۤ اٰبَآؤُكُمْؕ قُلِ اللّٰهُۙ ثُمَّ ذَرْهُمْ فِىْ خَوْضِهِمْ يَلْعَبُوْنَ
“எந்த மனிதருக்கும் அல்லாஹ் எதையும் அருளவில்லை” என்று அவர்கள் கூறிய போது அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் அவர்கள் மதிக்கவில்லை. “ஒளியாகவும், மனிதர்களுக்கு நேர் வழியாகவும் மூஸா கொண்டு வந்த வேதத்தை அருளியவன் யார்? அதை ஏடுகளாகவும் ஆக்கி வைத்திருக்கிறீர்கள்! அதைப் பகிரங்கப் படுத்துகிறீர்கள். அதிகமானதை மறைத்தும் வருகிறீர்கள்! நீங்களும், உங்கள் முன்னோர்களும் அறிந்திராதவை உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கேட்டு, அல்லாஹ் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் மூழ்கிக் கிடப்பதில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை விட்டு விடுவீராக!
இரத்தம், தானாக இறந்தவை, அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுக்கபட்டவை போன்றவை முஸ்லிம்களாகிய நமக்கு ஹராமாக்கப்பட்டிருப்பது போல, யூதர்களுக்கு கொழுப்பை அல்லாஹ் தடுத்திருந்தான். கூரிய நகமுடைய உயிரினங்களை சாப்பிடுவதையும் தடுத்திருந்தான். ஆனால் அவர்கள் இந்த கட்டுப்பாடுகளை கவனிக்காமல் தெரிந்தே வரம்புமீறுபவர்களாகஇருந்தார்கள், அநீதி இழைத்தார்கள். இதற்கு ஆதாரமாக இருக்கிற இறைவசனத்தையும் ஹதீஸையும் காண்போம்.
وَعَلَى الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا كُلَّ ذِىْ ظُفُرٍ ۚ وَمِنَ الْبَقَرِ وَالْغَـنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُوْمَهُمَاۤ اِلَّا مَا حَمَلَتْ ظُهُوْرُهُمَاۤ اَوِ الْحَـوَايَاۤ اَوْ مَا اخْتَلَطَ بِعَظْمٍ ؕ ذٰ لِكَ جَزَيْنٰهُمْ بِبَـغْيِهِمْ ۖوَاِنَّا لَصٰدِقُوْنَ
நகமுடைய ஒவ்வொன்றையும் யூதர்களுக்குத் தடை செய்திருந்தோம். ஆடு, மாடு ஆகியவற்றின் கொழுப்புகளில் அவற்றின் முதுகுகள் அல்லது சிறு குடல்கள் சுமந்திருப்பவை, அல்லது எலும்புடன் கலந்து விட்டவை தவிர மற்றவைகளை (கொழுப்புகளை) அவர்களுக்குத் தடை செய்திருந்தோம். அவர்கள் அநீதி இழைத்ததற்காக இவ்வாறு நாம் தண்டித்தோம். நாம் உண்மையே கூறுகிறோம்.
இப்னு அப்பாஸ் (ர) அவர்கள் கூறினார்கள்: (ஒருவர் மதுவை விற்பதாக அறிந்த போது) “அல்லாஹ் இன்னாரை அழிப்பானாக! நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் சாபம் யூதர்கள் மீது உண்டாகட்டும்! அவர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அதை உருக்கி விற்றார்கள்’ என்று கூறியுள்ளார்கள் என்பதை அவர் அறியமாட்டாரா?” என்று உமர் (ர) அவர்கள் கூற நான் கேட்டேன்.
நூல் : புகாரி (3460)
தவ்ராத் வேதத்திலுள்ள விதிகளை பேணுகிறோம் என்று சொல்லக்கூடிய யூதர்கள், கொழுப்பு ஹராமாக்கப்பட்டிருந்தும் அவற்றை விற்று பணத்தை திரட்டுபவர்களாக இருந்தார்கள். இதுமட்டுமின்றி வட்டியை வாங்கி வாழ்க்கை நடத்துபவர்களாகவும் மற்ற மக்களின் பணத்தை, செல்வத்தை அநியாயமாக அபகரித்து அதன் மூலம் ஆனந்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருந்தார்கள். இந்த யூதர்களின் பண்பு இன்றைய முஸ்ம்களிடம் ஒட்டிக்கொண்டிருப்பதை பார்க்கின்றோம். பன்றி இறைச்சி சாப்பிடக்கூடாது, தாமாக செத்ததை சாப்பிடக்கூடாது போன்ற ஹராமானவைகளைத் தவிர்ந்து கொள்ளகூடிய முஸ்லிம்களில் எத்தனையோ பேர், வட்டி வரதட்சனை போன்ற தடுக்கப்பட்ட காரியங்களை தைரியமாக செய்வதை பார்க்கின்றோம். இவ்வாறு இருப்பது முஸ்லிமாகவாழ்பவர்களுக்கு அழகல்ல.
இது யூதர்களிடம் தொற்றியிருந்த கொடிய நோய். இதோ இறைவன் கூறுவதை கேளுங்கள். மேலும் யூதர்கள், தங்களது வேதத்தின் சட்டதிட்டங்களை தங்களின் வசதிக்கேற்ப வளைப்பவர்களாக இருந்ததை வெட்டவெளிச்சம் போட்டுக்காட்டுகின்ற நிகழ்வொன்றையும் பார்ப்போம்.
فَبِظُلْمٍ مِّنَ الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبٰتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيْلِ اللّٰهِ كَثِيْرًا ۙ
யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் யூதர்கள் வந்து யூதர்களில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபச்சாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது அவர்கடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்து தவ்ராத்’ வேதத்தில் என்ன காண்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், விபச்சாரம் செய்தவர்களை நாங்கள் கேவலப்படுத்திட வேண்டும் என்றும்,
அவர்களுக்குச் சாட்டையடி வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது என்று பதிலத்தார்கள்.
(அப்போது யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தைத் தழுவிய) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “நீங்கள் பொய் கூறுகிறீர்கள். கல்லெறி தண்டனை (ரஜ்ம்) உண்டு என்று தவ்ராத்தில் கூறப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்கல் ஒருவர் கல்லெறி தண்டனை பற்றிக் கூறும் வசனத்தின் மீது தனது கையை வைத்து (மறைத்து)க் கொண்டு அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை வாசித்தார். அவரிடம் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “உன் கையை எடு!” என்று சொல்ல, அவர் தனது கையை எடுத்தார். அப்போது அங்கே கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருந்தது. யூதர்கள், “இவர் (அப்துல்லாஹ் பின் சலாம்) உண்மையே சொன்னார், முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருக்கிறது” என்று சொன்னார்கள். உடனே (விபச்சாரம் புரிந்த) அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கிடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண் அப்பெண்ணைக் கல்லடியிருந்து காப்பதற்காக அவள் மீது கவிழ்ந்து மறைத்துக் கொள்வதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : புகாரி (6841)
சத்திய சஹாபாக்கள்
இது போன்ற பண்பு ஒருபோதும், நம்மிடத்தில் குடிகொண்டு விடக்கூடாது. சத்திய சஹாபாக்கள் எப்படி இறைவசனத்திற்கு கட்டுப்பட்டார்களோ, அது போன்று நாமும் கட்டுப் பட வேண்டும்.
இப்னு அபீ முலைக்கா அவர்கள் கூறியதாவது :
(ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ர) அவர்களும் உமர் (ர) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். பனூதமீம் குலத்தைச் சேர்ந்த பயணக்குழுவினர் நபி(ஸல்) அவர்கடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார் கள்.
அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாஷிஉ குலத்தவரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ பின் மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்.
“அந்த இன்னொருவருடைய பெயர் எனக்குத் தெரியாது” என்று அறிவிப்பாளர் கல் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்கடம், “எனக்கு மாறுசெய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று கூறினார்கள். உமர் (ர) அவர்கள், “தங்களுக்கு மாறுசெய்வது என் விருப்பமன்று” என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது, “இறைநம்பிக்கை கொண்டவர் களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்!” எனும் (49:2ஆவது) வசனத்தை அல்லாஹ் அருனான்.
இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த வசனம் அருளப்பெற்றபின் உமர் (ர) அவர்கள் நபி (ஸல்) அவர்கடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்துகொள்வார்கள்.
கோபத்தை அடக்கிக் கொள்ளுதல் :
ஏழை எளிய மக்களின் உணர்வுகளை மதிப்பவர்களாகவும் அவர்களின் நலன்களில் அக்கரைக் கொண்டவர்களாகவும் நேர்மையான ஆட்சியை தந்த வர்கள் உமர்(ரலி) அவர்கள். இத்தகைய பிரமாதமான ஆட்சியைப் பற்றி சரியான முறையில் அறியாமல், நபித்தோழர் ஒருவர் தவறுதலாக குறைகூறும் போது கோபமுற்றவர்களாக அவரைத் தாக்குவதற்கு முற்பட்டார்கள் உமர்(ரரி) அவர்கள்.
அப்போது அத்தன்மையை அனுமதிக்காத வகையிலுள்ள அல்குர் ஆனின் வசனம் அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டதுமே, அவ்வசனத்திற்கு அடிபணிந்தவர்களாக தமது கோபத்தை மென்றுவிழுங்கிவிடுகிறார்கள். உயைனா பின் ஹிஸ்ன்(ரரி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்கடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பப்பதில்லை” என்று சொன்னார்.
உமர் (ர) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு பின் கைஸ்(ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி,
خُذِ الْعَفْوَ وَاْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجٰهِلِيْنَ
“இறை நம்பிக்கையாளர்கன் தலைவரே! உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, (நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!’ (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாத வர்கல் ஒருவர்” என்று சொன்னார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை உமர் (ர) அவர் களுக்கு ஓதிக் காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள்.
உமர் அவர்களைப் போன்று, நாமும் இறைவசனம் முழுமைக்கும் கட்டுப்பட்டு நடக்க, அல்லாஹ் நம் அனைவர் மீதும் அருள்புரிவானாக! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.