052. கடுகளவு மூக்குத்தி மற்றும் மோதிரம் இஹ்ராமின்போது அணியலாமா?
வழக்கமாகப் போடும் கடுகளவு மூக்குத்தி மற்றும் மெல்லிய குச்சியளவிலான மோதிரம் போன்றவற்றை இஹ்ராமின்போது அணியலாமா? (மற்ற நேரங்களில் இதுபோன்ற சிறிய அளவுகளில் இருந்தால் இவை வெளியில் தெரியலாமா?)
பதில்
இஹ்ராமின் போது அணியத் தடை செய்யப்பட்டவைகளில் இவை இடம்பெறவில்லை. ஆனால் பொதுவாக அலங்காரங்களை வெளிப்படுத்தும் வண்ணம் பெண்கள் நகைகளை அணிவது தவிர்க்கப்பட வேண்டும்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.