கடவுள் மறுப்பும் கள்ளத் தொடர்பும்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

கடவுள் மறுப்பும் கள்ளத் தொடர்பும்

கடவுளை மற , மனிதனை நினை என்று சொல்லும் நாத்திகர்கள் கள்ள தொடர்பை நல்லது என்கிறார்கள். அது கமல்ஹாசனானாலும், கி.வீரமணியானாலும் உச்ச நீதிமன்றம் சொன்ன கேடுகெட்ட தீர்ப்பை ஆதரித்துள்ளார்கள். கடவுள் மறுப்பு  கொள்கையுடையவர்கள் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று பறைசாற்றி கொண்டாலும் அறிவிற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாததுபோலவே நடந்து கொள்வார்கள்.

கண்ணால் கண்டால்தான் கடவுளை நம்புவேன் என சொல்லிக்கொண்டே பல்வேறு மூட நம்பிக்கைகளை நம்புவார்கள். இறந்து போன பெரியாரை “வாழ்க” என்றும் பெரியாருக்கு பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு சிலைக்கு மாலையிடுவதுமென தங்களது அறிவுகெட்ட தனத்தை உலகத்திற்கு படம் போட்டு காட்டிக்கொண்டே இருப்பார்கள்.

ஒழுக்க கேட்டின் உச்ச வரம்பாக பெண்ணிற்கு கற்பு சுதந்திரம் வேண்டும் என்ற கேடு கெட்ட சிந்தனை அவர்களின் உள்ளங்களில் ஊடுருவி உள்ளது, அதாவது ஒரு பெண்ணின் கற்பபையில் கணவனை தவிர்த்து யாருடைய விந்தை வேண்டுமானாலும் செலுத்தலாம் என்ற தத்துவமே கற்பு சுதந்திரம் என்ற கேடுகெட்ட சிந்தனை.

தஸ்லிமா நஸ்ரீன் என்ற வங்கதேச பெண் ஒருவர் இப்படி உளறி கொட்டியதும் அதற்கெதிராக முஸ்லிம் உலகமே எதிர்ப்பு தெரிவித்ததையும் கடந்த காலங்களில் பார்த்துள்ளோம். ஆனால் அதே கேடுகெட்ட சித்தாந்தத்தை உச்ச நீதிமன்றமே அனுமதிக்கின்ற செயல் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும். ஓரின சேர்க்கையை ஆதரிப்பதும், கள்ள உறவை அனுமதிப்பதுமென இந்திய நாட்டின் சட்டங்கள் அனைத்தும் கேலிக்குரியதாகவும் எதிர்கால இந்தியாவின் ஒழுக்கத்தை கேள்விக்குறியதாகவும் ஆக்குகிறது.

இப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான தீர்ப்புகளை ஆதரிப்பவர்கள் யாரென்று பார்த்தால் காசு கொடுத்தால் உடல் அங்கங்களையெல்லாம் ஊர் மேய அனுமதிக்கும் அவர்கள் சார்ந்த சினிமாத்துறையுமே. ஒரு ஆண் சமகாலத்தில் ஒரு மனைவியோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளோடோ வாழ்ந்தால் அதனால் யாருக்கும் எந்த நோயும் ஏற்படாது ஆனால் ஒரு பெண்ணோடு இரு ஆண்கள் ஒரே சம காலத்தில் இல்லறம் நடத்தினால் எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோய் தாக்கும் என்பதே மருத்துவ உண்மை.

திருமணம் என்ற உறவின் மூலமே மன அமைதி கிடைக்கும் என்று குர்ஆன் கூறும் நல்லுபதேசங்களை ஏற்று ஆண் / பெண் என்ற பாலினம் மூலமே மனித சமூகம் பல்கிப்பெருகும் என்ற நிலையில் வாழ்ந்தால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும்.

Source 🙁 05/10/18 )