37) கடமையான தொழுகை முடிந்த பின்

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

கடமையான தொழுகை முடிந்த பின்

لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ اَللّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதை(த்)த வலாமுஃதிய லிமா மனஃ(த்)த வலா யன்ப[F]வு தல்ஜத்தி மின்(க்)கல் ஜத்

இதன் பொருள் :

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட் களின் மீதும் ஆற்றல் உடையவன். இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. செல்வமுடைய எவரது செல்வமும் உன்னிடம் பயனளிக்காது.

ஆதாரம்:(புகாரி: 844, 6330)

தொழுது முடித்தவுடன்

أَسْتَغْفِرُ اللهَ

அஸ்தஃக்பி[F]ருல்லாஹ்

(அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்) என்று மூன்று தடவை கூற வேண்டும். பின்னர்

اَللّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ ذَا الْجَلاَلِ وَالاِكْرَامِ

அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபா[B]ரக்(த்)த தல் ஜலாலி வல் இக்ராம்

எனக் கூற வேண்டும்.

இதன் பொருள் :

இறைவா! நீயே சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படும். மகத்துவமும், கண்ணியமும் உடையவனே நீ பாக்கியமிக்கவன்.

ஆதாரம்:(முஸ்லிம்: 1037, 931)

اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوْذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மினல் ஜுபு[B]னி வஅவூது பி[B](க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி வஅவூது பி[B](க்)க மின் பி[F]த்னதித் துன்யா வஅவூது பி[B](க்)க மின் அதாபி[B]ல் கப்[B]ரி

இதன் பொருள் :

இறைவா! கோழைத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். தள்ளாத வயது வரை நான் வாழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இவ்வுலகின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மண்ண றையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்:(புகாரி: 2822)

رَبّ قِنِيْ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ

ரப்பி[B] கினீ அதாப[B](க்)க யவ்ம தப்[B]அஸு இபா[B]த(க்)க

இதன் பொருள் :

என் இறைவா! உனது அடியார்களை நீ எழுப்பும் நாளில் உனது வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!

ஆதாரம்:(முஸ்லிம்: 1280, 1290)