கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சரியா?
கேள்வி-பதில்:
இதர சட்டங்கள்
கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சரியா?
சரியில்லை
குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமை என்று மார்க்கம் கூறவில்லை. இது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட வணக்கமாகும். இவ்வணக்கத்தை நிறைவேற்றியவருக்கு நன்மை உண்டு. இதைச் செய்யாவிட்டால் குற்றம் ஏதுமில்லை.
அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை உள்ளது.
கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் : (முஸ்லிம்: 3832) (3498)
வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில் இருக்கும்போது மேலும் கடன் பட்டு தன் மீது சுமையை அதிகப்படுத்திக் கொள்வதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.