058. கஃபதுல்லாஹ்வை பார்த்தவுடன் தல்பியாவை நிறுத்த வேண்டுமா? ஹரம் எல்லையை அடைந்ததுமா?
கஃபதுல்லாஹ்வை பார்த்தவுடன் தல்பியாவை நிறுத்த வேண்டுமா? ஹரம் எல்லையை அடைந்ததும் தல்பியாவை நிறுத்த வேண்டுமா?
பதில்
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் – புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். “நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள்.
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஹரம் எல்லைக்கு வந்ததும் தக்பீரை நிறுத்த வேண்டும் என்பதே சரி!