85) ஓட்டமும் நடையுமாகச் செல்லுதல்
ஜனாஸாவைச் சுமந்தவர்களும், பின் தொடர்பவர்களும் ஓடுகிறார்களோ என்று கருதும் அளவிற்கு ஓட்டமும் நடையுமாகச் செல்வது சிறந்ததாகும்.
நாங்கள் அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்டோம். (அப்போதைய ஆட்சியாளர்) ஸியாத் கட்டிலின் முன்னால் நடக்கலானார். அப்துர் ரஹ்மானின் குடும்பத்தினர் சிலர் ஜனாஸாவின் கட்டிலை எதிர் நோக்கி பின்புறம் நடந்தவர்களாக ‘வாருங்கள்! அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வான்’ என்று கூறினர். அப்போது மெதுவாக அவர்கள் ஊர்ந்து சென்றனர். மிர்பத் எனும் இடத்தை நாங்கள் அடைந்த போது அபூ பக்ரா (ரலி) அவர்கள் கோவேறுக் கழுதையில் வந்து எங்களுடன் சேர்ந்தனர். மக்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்கள் மீது கோவேறுக் கழுதையை ஏவினார்கள். அவர்களை நோக்கிச் சாட்டையால் சொடுக்கினார்கள். ‘நபிகள் நாயகத்தின் முகத்தைக் கண்ணியப்படுத்திய இறைவன் மேல் ஆணையாக! நாங்கள் நபிகள் நாயகத்துடன் ஓட்டமாக ஓடும் அளவுக்கு விரைந்து செல்வோம்’ என்று கூறினார்கள். உடனே மக்கள் நெருக்கமாக நடக்கலானார்கள்.
அறிவிப்பவர்: யூனுஸ்
நூல்: நஸயீ 1886