ஒரு படைப் பிரிவினருக்கு தளபதி ஏற்படுத்திய போது
முக்கிய குறிப்புகள்:
குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்
இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூதருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக! (எனும்(அல்குர்ஆன்: 4:59) ➚ஆவது வசனத் தொடர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோ ருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக எனும் (அல்குர்ஆன்: 4:59) ➚ஆவது) வசனம், நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா பின் கைஸ் பின் அதீ (ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப் பிரிவினருடன் அனுப்பிய போது இறங்கியது.