96) ஒரு குழிக்குள் பலரை அடக்கம் செய்தல்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

ஒரு நேரத்தில் அதிகமான மக்கள் இறந்து விட்டால் அனைவருக்கும் தனித் தனியாக குழிகள் வெட்டுவது சாத்தியமில்லாமல் போகலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் பெரிய அளவில் குழிகள் வெட்டி இருவர் அல்லது மூவரை அந்தக் குழியில் அடக்கம் செய்யலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களை ஒரு கப்ருக்கு இருவர் என்ற முறையில் அடக்கம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(புகாரி: 1345)