ஏழையாக இருந்த நபியவர்கள் எப்படி தர்மம் செய்திருப்பார்கள்?
ஏழையாக இருந்த நபியவர்கள் எப்படி தர்மம் செய்திருப்பார்கள்?
ஏழைகள் தர்மம் செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இக்கேள்வியைக் கேட்டுள்ளீர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட தர்மம் செய்யும் ஏழைகள் இருந்தனர்.
அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மால் இயன்ற அளவுக்கு தர்மம் செய்வார்கள். பணக்காரர்கள் அளவுக்கு அதிகம் தர்மம் செய்யாவிட்டாலும் தம்மால் இயன்ற அளவுக்கு தர்மம் செய்வார்கள்.
ரமலான் வந்து விட்டால் வழக்கத்தை விட அதிகம் தர்மம் செய்வார்கள்.
உதாரணமாக மற்ற நாட்களில் பத்து ரூபாய் தர்மம் செய்யும் ஏழை, ரமளானில் இருபது அல்லது முப்பது ரூபாய்கள் தர்மம் செய்தாலும் அது அவரைப் பொருத்தவரை அதிகம் தான். ஆயிரக்கணக்கில் தர்மம் செய்பவர்களோடு ஒப்பிட்டு இதைக் குறைவு என்று சொல்லக் கூடாது. மாறாக ரமலானுக்கு முன்னர் செய்ததை விட பல மடங்கு அதிகமாக இருந்ததா என்று ஒப்பிட வேண்டும்.