எது சுதந்திரம்?
எது சுதந்திரம்?
ஆகஸ்ட் 15, 1947-ல் வானத்தில் பறவைகள் சிறகடிக்க, பசுமையான மரங்கள் காற்றில் நடனமாட, இந்தியர்களின் உள்ளத்தில் பட்டாம்பூச்சி படபடக்க, மிக பெரிய ஆனந்தத்தின் உச்சியில் இந்தியா சுதந்திரம் பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டால் நம் நாட்டின் சுதந்திரதிற்காக மகாத்மா காந்தி அவர்கள் எவ்வளவு பாடுப்பட்டார்கள் சுபாஷ் சந்திரபோஸ், கப்பலோட்டிய தமிழன், கொடிக்காத்த குமரன் என்ற நீண்ட நெடிய பட்டியலில் நம் நாட்டு ஆட்சியாளர்களும், பிரபல பேச்சாளர்களும் புகழ்பாட ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால், உண்மையிலேயே இதற்காக பாடுபட்ட முஸ்லீம்களின் வரலாற்றை மறைத்து விடுவார்கள் இது பல கட்டுரைகளிலும் பல்வேறு மேடைப்பேச்சுகளிலும் பல ஆக்கங்களிலும் வரலாற்று ஆதாரத்துடன் மக்கள் மனதில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதை மீண்டும் கொண்டுவருவது நம் கட்டுரையின் நோக்கமல்ல, ,,ஆகஸ்ட் 15 வந்துவிட்டால் தேசிய கொடி ஏற்றி நெஞ்சில் கொடியை தாங்கி இனிப்புகளை உண்டு கொண்டாடப்படும் அந்த சுதந்திரத்தை சிந்திக்க வேண்டும் என்பதே நமது கட்டுரையின் நோக்கம்
சுதந்திரம் என்றால் என்ன ?
சுதந்திரம் என்றால் என்ன? என்ற கேள்விக்கான பதில் தெரியாமல் பல நபர்கள் இருக்கிறார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் ஒரு சில கேள்விகள் சுதந்திரம் என்பது என்ன என்று நமக்கு தெளிவாக உணர்த்தும். ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட சாராரால் அடக்கு முறை செய்யப்படுகிறான் அவனுடைய உரிமைகள் பரிக்கப்படுகிறது சமுதாயத்தால் கேவலமாக நடத்தப்படுகிறான் இப்போது இந்த மனிதனை சுதந்திரம் பெற்றவன் என்று நாம் கூறுவோமா?
அல்லது ஒரு மனிதன் சமுதாயத்தில் எல்லா மனிதர்களை போலவும் உரிமையுடன் நடத்தபடுகிறான் அவன் தன்னுடைய முழு உரிமையையும் பெற்று கொள்கிறான் இப்போது இந்த மனிதனை சுதந்திரம் பெற்றவன் என்று நாம் கூறுவோமா?படித்து முடிப்பதற்குள்ளாகவே இரண்டாவதாக சொல்லப்பட்ட மனிதனை தான் சுதந்திரவாளி என்று நம்முடய மனமே நமக்கு சமிக்ஞை செய்து விடுகிறது. ஆம் சுதந்திரம் என்றால் ஒரு நாட்டின் குடிமகன் தன்னுடைய நாட்டில் முழு உரிமையுடன் வாழ்வது சுதந்திரமாகும்.
மேற்கூறப்பட்ட இதை விளங்கிக் கொண்டால் இந்தியாவினுடைய சுதந்திரம் எப்படிப்பட்டது என்பதை மிக எளிமையாக நாம் விளங்கிக் கொள்ள முடியும். நம் நாடு சுதந்திரம் பெற்றது 1947-ல் இப்போது நாம் சொல்ல கூடிய சம்பவம் அதிலிருந்து 10 வருடத்திற்கு முன்பு நடந்ததாகும். 1937 டிசம்பர் மாதம் மிக பெரிய அளவில் தென்மாவட்டதில் ஒரு அமைப்பின் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் தலித்துகள் சமபந்தி போஜனத்தில் சாப்பிட்டார்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக நிலவுடமையாளர்கள் அவர்களை மரத்தில் கட்டி வைத்து அவர்களுக்கு மொட்டையடித்து அவர்களுடைய வாயில் சாணியை கரைத்து ஊற்றினார்கள்.
எப்படிப்பட்ட கொடூர சம்பவம். இது நடந்தது இந்தியா சுதந்திரம் பெருவதற்கு முன்பு
இதுதான் சுதந்திரமா??? ஆனால் இந்தியாவில் ஆங்கிலேயர்களிடம் இருந்து அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டு வெள்ளையர்கள் விரட்டியடிக்கப்பட்டு இந்தியா சுதந்திரம் அடைந்து இந்திய மக்கள் தங்களுடைய நெஞ்சிலே சுதந்திரத்தை தாங்கிய பிறகு நடந்த நிகழ்வுகள் என்ன தெரியுமா?
டிசம்பர்- 25,, 1968 தங்களுடைய உடல் உழைப்பை முழுமையாக செலுத்தி வேலைப் பார்த்த தலித்கள் தங்களுடைய வயிற்று பசிக்காக எங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தாருங்கள் என்று கேட்டதற்காக உயர்ஜாதி நிலத்தவர்களால் கிட்டதட்ட 44 தலித்கள் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்டனர். சுதந்திரத்திர்க்கு முன்னால் நடந்ததை போன்று தான் சுதந்திரத்திர்க்கு பின்னாலும் நடக்கிறது, என்றால் இதுதான் உண்மையில் இந்தியாவின் சுதந்திரமா?
கண்ணை கலங்க வைத்த சம்பவம்..
சுதந்திரம் பெற்ற இந்தியாவில் மறக்க முடியாத சம்பவம் இது…. இந்த சம்பவம் -11-2016 ஹிந்து நாளேட்டிலும் முக்கிய செய்தியாக வெளியானது இதோ!! உங்கள் கண் முன்.. பையோ பேட்மாங்கே என்பவரின் மனைவி தான் சுரேகா (45) மகள் பிரியங்கா (17)மகன்கள் ரோஷன் (23) சுதிர் (21) இவர்களுடைய குடும்பம் படிப்பறிவு பெற்ற குடும்பம்.
அந்த கிராமத்தில் குண்பி மராத்தா என்ற பிரிவினர்கள் இருக்கிறார்கள் அவர்களில் சிலர் மீது சுரேகா புகார் அளித்தார் இவர் புகார் அளித்ததும் படிப்பறிவு பெற்றதன்னுடைய நிலை என்ன தெரியுமா?? செப்டம்பர் 29 ஆம் தேதி சுரேகாவுடைய கணவர் வீட்டில் இல்லாத போது சிலர் குடிபோதையில் வந்து இரும்பு கம்பியால் சுரேகாவையும் அவர்களின் பிள்ளைகளையும் தாக்கினார்கள் சுரேகாவையும் அவருடைய மகளையும் நிர்வாணப்படுத்தி கற்பழித்து தெருவுக்கு இழுத்து வந்து கொன்று வீசினார்கள் அவர்களை காப்பாற்ற முடியாமல் புதரில் இருந்து பார்த்து கண்ணீர் வடித்தார் போட்மாங்கே… படிக்கின்ற நம்மைப் போன்றே!
இதுதான் சுதந்திரமா?
இதே போன்று கொடூர செயல்களை 1947ல் இருந்து 2019 இன்று வரை நம்மால் பட்டியலிட முடியும்.. இப்போது சொல்லுங்கள்!! நாம் சுதந்திரம் என்றால் என்னவென்று சொன்னோமோ அந்த விளக்கத்திலிருந்து இந்தியர்களின் சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் இப்போது இந்தியா சுதந்திரம் பெற்றது என்று கூறலாமா ?
இதுதான் சுதந்திர நாடா? இதே போன்று இந்திய சர்க்காரால் அடக்குமுறை செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஏராளம். அவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக நாம் பேசி பேசி நமக்கு வாய் வலித்தாலும் கூட பரவாயில்லை. அவர்களுடைய பட்டியலை சொல்லுவதற்கே நமக்கு வாய் வலிப்பது தான் வேதனையிலும் வேதனை.
ஆங்கிலேயர்களிடமிருந்து மீண்டு அயோக்கியர்களிடம் அரக்கர்களிடம் நம்முடைய சுதந்திரத்தை பரிகொடுத்து இருக்கிறோம் என்பதை உணர்த்தும் சில உதாரணங்களை உங்கள் முன் பட்டியலிடுகிறோம்.
அநியாயத்தின் உச்ச கட்டம்..
சுதந்திர இந்தியாவில் அடக்குமுறை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் சில…
- 2014 – ஜூன் – புனே – சாதிக்
- 2015 – மே – நாகலாந்த் – சார்புதீன்கான்
- 2015 – மே – உபி ராஜஸ்தான் – அக்பர் குரேசி
- 2015 – செப்டம்பர் – உபி – அஹ்லாக்
- 2015 – அக்டோபர் – காமீர்
- 2015 – ஹிமாசலம் – அக்தார்
- 2015 – மணிப்பூர் – ஹம்ஸாத் அலி
- 2016 – ஏப்ரல் – ஹரியானா – அப்பாஸ்
- 2016 – ஏப்ரல் – ஹரியானா – பெஹ்லுகான்
- 2017 – மே – ஜார்கண்ட் – அபூஹனீஃபா அன்சர் அலி
- 2017 – ஏப்ரல் – ஹஸ்ஸாம் – அபூஹனீஃபா
- 2017 – ஜூன் – ராஜஸ்தான் – ஹுசைன்
இதற்கு பிறகும் இந்தியா எப்படி சுத்ந்திரம் பெற்றது தெரியுமா? நாம் சுதந்திரத்திரத்திற்காக எவ்வாறு பாடுப்பட்டோம் தெரியுமா? என்றெல்லாம் யார் பேசுகிறார்களோ இவர்களை விட இந்த உலகத்தில் அநியாயக்காரர்கள் யார் இருக்க முடியும்?
ஆட்சியாளர்களே இதோ சுதந்திர சர்க்கார்
மக்களுக்கு சுதந்திரத்தையும் உரிமையையும் வழங்க வேண்டிய ஆட்சியாளர்களே இன்றைக்கு மக்களுடைய உரிமையை பறித்து அவர்களுடைய முதுகுக்குப் பின்னால் குத்தக்கூடிய விஷமத்தனமான வேலையை செய்கிறார்கள்.. . அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். ஆனால் ஒரு நாட்டினுடைய ஜனாதிபதி, மக்கள் தங்கள் உயிரை விட மேலாக மதிக்க கூடிய மாமனிதர், அனைத்திற்கும் மேலாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல் ) அவர்கள் தன்னுடைய நாட்டு மக்களுக்கு எந்த அளவிற்கு சுதந்திரத்தையும் உரிமையையும் வழங்கினார்கள் தெரியுமா??
உண்மையான சுதந்திரம் எது
இதற்கு முன் நம் நாட்டில் நடந்த அடக்கு முறைகளையும் அயோக்கிய தனத்தையும் நாம் பட்டியலிட்டோம். இப்போது உண்மையான சுதந்திரம் எது என்பதை இங்கே நாம் பட்டியலிடுகிறோம்.
நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம், அவர்களுடன் மக்கள் ஹுநைன் போரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கிராமவாசிகள் அல்லாஹ்வின் தூதரை பிடித்து (போரில் கிடைத்த பொருட்களிலிருந்து தங்களுக்கு கொடுக்கும் படி கேட்கலானார்கள். இறுதியில், அவர்களை (சூழ்ந்து நெருங்கிய படி )ஒரு கருவேல மரத்தில் அருகில் தள்ளி கொண்டு சென்று அவர்களின் போர்வையை பறித்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், எனக்கு என் போர்வையை கொடுத்து விடுங்கள் இந்த (கருவேல மரத்தின் )முட்கள் அளவிர்க்கு ஒட்டகங்கள் (என்னிடம்)இருந்தாலும் அவற்றை நான் உங்களிடயே பங்கிட்டு விடுவேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவோ, போயி சொல்லுபவனாகவோ,கோழையாகவோ பார்க்க மாட்டீர்கள் என்றார்கள்.
அறிவிப்பாளர் :ஜுபைர் பின் முத் இம் (ரலி)
(புகாரி: 3148)
இப்போது பாருங்கள்.. ஒரு நாட்டின் ஆட்சியாளரை மக்கள் முள்ளில் தள்ளிவிடுகிறார்கள். அப்போது கூட என்னுடய போர்வையை எனக்கு எடுத்து தாருங்களேன், என்று தான் கூறினார்களே தவிர மன்னரையே தள்ளிவிட்டுவிட்டீர்களா?என்று அந்த மக்களை சிறைப்பிடிக்கவில்லை அடக்குமுறை செய்யவில்லை. ஏன் என்றால் !ஒரு ஆட்சியாளரிடம் மக்கள் அனைத்தையும் கேட்கும் சுதந்திரத்தை நபியவர்கள் வழங்கி இருந்தார்கள்.
ஒட்டுமொத்த உலக ஆட்சி வர்கத்தின் சாம்ராஜியத்தை ஒற்றை செயலின் மூலம் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பறைசாட்டினார்களே, இதைக்கொண்டு நாம் எல்லா ஆட்சியாளர்களுக்கும் சவாலாக சொல்லிக்கொள்கிறோம்.. உங்களால் இதைப்போன்று சுதந்திரத்தை கொடுக்க முடியுமா?என்பதை யோசித்து பாருங்கள்.
இப்போது நம்முடைய சுதந்திரத்தை பார்ப்போம்..
நம்முடய நாட்டிலே பல குடும்பங்களை நாசமாக்கக்கூடிய குடியைகெடுக்கும் கேடு கெட்ட மது பானத்தை தமிழகத்திலே நாங்கள் விற்போம் என்று அதிகார வர்க்கத்திலே இருக்கும் ஒருவரே மேடை போட்டு பேசுகிறார். ஆனால் அவரிடத்தில் இதை பற்றி நேருக்கு நேர் கேட்பதற்க்கு கூட நமக்கு சுதந்திரம் இல்லயே என்ன செய்வது? இதுதான் நம்முடைய சுதந்திர நிலைமை ! இது பற்றி நம்மிடத்தில் கேட்டால் ‘அவரோ அதிகாரத்தில் இருக்கக்கூடியவர் ; நாமோ அடிமைகளாக வாழக்கூடியவர்கள் ‘ என்றுதான் பதில் சொல்ல முடியும்.
மேலும் நபியவர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் மக்களுக்கு சுதந்திரத்தை வாரி வழங்கிய வாழ்க்கைச் சுடராக வாழ்ந்ததை பல சூழ்நிலைகளில் பார்க்கலாம்.
அவற்றில் சில…
நான் நபி (ஸல் )அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன் அப்போது அவர்கள் ஓரம் தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றை போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராம வாசி ஒருவர் அவர்களை கண்டு அந்த சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால் அந்த கிராம வாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி நபி (ஸல்)அவர்களின் தோளில் ஒரு மூலையில் (காயப்படுத்தி)அடையாளம் பதிந்திருந்ததை கண்டேன். பிறகு அவர் (நபி (ஸல்)அவர்களிடம் ),தங்களிடம் உள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்கு கொடுக்கும் படி கட்டளை இடுங்கள் என்று கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்கள் அவரை திரும்பி பார்த்து சிரித்து விட்டு பிறகு அவருக்கு கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
(புகாரி: 3149)
இதை பார்க்கும் போது,இதுதான் சுதந்திரத்தின் உச்ச கட்டம் என்று நம்மால் சொல்ல முடிகிறது. ஏன் தெரியுமா?ஒரு ஆட்சியாளருடைய சால்வையை இழுத்து அவர்க்கு காயத்தையும் ஏற்படுத்திவிட்டு பிறகு தனது உரிமையை கேட்கிறார். அதற்கு அண்ணலாரோ புன்சிரிப்போடு ‘என் மக்கள் என்னிடத்தில் தானே கேட்க முடியும் என்பதை உரிமையோடுபுரிந்து கொண்டு அவர் கேட்டதைவிட அதிகமாக வாரி வழங்குகிறார்.
இப்போது சொல்லுங்கள் அண்ணலார் வழங்கிய, இது சுதந்திரமா?அல்லது நம்முடைய மாண்புமிகு மக்களாட்சி வழங்குவது சுதந்திரமா? நாம் சுதந்திர காற்றை முழுமையாக சுவாசிக்க வேண்டும் என்று சொன்னால் உண்மையை உரக்க சொல்லும், உரிமையை மீட்டு தரும் இஸ்லாத்தின் சட்டம் இந்தியாவின் சட்டமாக அரங்கேற்றப்பட்டால் தான் சாத்தியம்!! இது சத்தியம்!!! எல்லாம் வல்ல இறைவன் இதற்கு உதவி புரிவானாக…