127. எதற்கு வலது பக்கமாக துஆ செய்ய வேண்டும்? நமக்கா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

முதல் ஜம்ராவில் கல் எறிந்த பிறகு வலது பக்கமாக நகர்ந்து நின்றும், இரண்டாவது ஜம்ராவில் கல் எறிந்த பிறகு இடது பக்கமாக நகர்ந்து நின்றும் கிப்லாவை நோக்கி துஆ செய்யவேண்டுமா? இதில் வலது பக்கம், இடது பக்கம் என்பது ஜம்ராவுக்கு வலது / இடது பக்கம் என்று குறிக்குமா? அங்குள்ள மஸ்ஜிதுல் ஹீஃபாவுக்கு வலது / இடது பக்கம் என்று குறிக்குமா?

பதில்

கல்லெறிபவரின் வலது பக்கம், இடது பக்கத்தையே குறிக்கும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஜம்ராவில் ஏழுகற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். தம் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று துஆ செய்வார்கள். பின்பு, இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகு இடது பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய், கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பின்பு பத்னுல் வாதி என்னுமிடத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள்; அங்கு நிற்கமாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, “இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்!” எனக் கூறுவார்கள்.

(புகாரி: 1751, 1753)