உஹதுப் போரில் நபி காயம்பட்ட போது
முக்கிய குறிப்புகள்:
குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்
சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுதுப் போரில் காயப்படுத்தப்பட்ட போது எதிரிகளான) ஸஃப்வான் பின் உமய்யா, சுஹைல் பின் அம்ர், ஹாரிஸ் பின் ஹிஷாம் ஆகியோருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை (என்ற 3:128-வது வசனம்) அருளப்பட்டது.