உளூ பாங்கின் போது பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா?
கேள்வி-பதில்:
தொழுகை
உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா?
பதில்:
இல்லை
பெண்கள் அன்னிய ஆண்கள் மத்தியில் இருக்கும் போதும், தொழுகையின் போதும் தலையை மறைக்க வேண்டும். ஏனெனில் தலை மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும். ஆனால் உளூச் செய்யும் போதும், பாங்கு கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை.
மேலும் உளூச் செய்யும் போது தலைக்கு மஸஹ் செய்வது அவசியமாகும். தலைக்கு மஸஹ் செய்யும் போது தலையைத் திறக்காமல் செய்ய முடியாது. இதில் இருந்தே இந்த நம்பிக்கை தவறானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பெண்கள் தொழுகையிலும், அந்நிய ஆண்களுக்கு முன்பாக இருந்தாலும் மட்டுமே தலையை மறைக்க வேண்டும். மற்ற நேரங்களில் அவர்கள் தலையைத் திறந்து வைப்பதால் எந்தக் குற்றமும் இல்லை.