124) உறவினர்கள் ஏகத்துவக் கொள்கையைப் பேண வஸிய்யத் செய்தல்
நூல்கள்:
ஜனாஸாவின் சட்டங்கள்
மரணம் நெருங்கி விட்டதாக உணர்பவர் தமது குடும்பத்தார் ஏகத்துவக் கொள்கையைக் கடைசி வரை கைக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்? என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள் என்றே (பிள்ளைகள்) கூறினர்.