141. உம்ரா செய்யும் போது ஆடு, மாடு பலியிடுவதில்லையே! ஏன்?
(புகாரி: 2734)ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உம்ராô செய்யும் போது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டதாக வருகின்றது. ஆனால் இப்போது யாரும் உம்ரா செய்யும் போது ஆடு, மாடு, ஒட்டகங்கள் அறுத்துப் பலியிடுவதில்லையே! ஏன்?
பதில்
நபி (ஸல்) அவர்கள் முதன்முதலில் உம்ராவுக்கு வரும் போது பலிப்பிராணிகள் அழைத்து வந்தார்கள். அப்போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் மக்கா இணை வைப்பாளர்களுக்கும் இடையே உடன்படிக்கை கையெழுத்தானது. அது தான் ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும்.
இதன்பிறகு, கொண்டு வந்த ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டு, முடியை மழித்து விட்டுத் திரும்பி விட்டார்கள்.
அந்த உடன்படிக்கை விதியின்படி மறு ஆண்டு அவர்கள் உம்ராவை நிறைவேற்றினார்கள். அப்போது அவர்கள் எந்தப் பலிப்பிராணியையும் கொண்டு வரவில்லை. இந்த அடிப்படையில் உம்ராவின் போது குர்பானி கொடுத்ததற்கும், கொடுக்காததற்கும் நபி (ஸல்) அவர்களிடம் முன்மாதிரி இருக்கின்றது.
இதன்படி இப்போதும் ஒருவர், உம்ராவின் போது பலிப்பிராணியை அறுக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்தது போன்று பலிப்பிராணியை உடன் அழைத்து வந்து குர்பானி கொடுக்கலாம். ஹஜ்ஜுக்குச் சென்று அங்கு போய் குர்பானி கொடுப்பது போன்று உம்ராவில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.