023. உம்ராவின் சிறப்பு என்ன?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

உம்ராவின் சிறப்புகள்

ஒரு உம்ராச் செய்து விட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 1773)

ரமலானில் உம்ரா செய்வதின் சிறப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)(புகாரி: 1782)

உம்ராவின் கிரியைகள் என்னென்ன?

நபி (ஸல்) அவர்கள் (இஹ்ராம் ஆடை அணிந்து கொண்டு மக்கா) வந்ததும் இறையில்லம் கஃஅபாவை ஏழு முறை தவாப் செய்து விட்டு (பின்) மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுத பின் ஸஃபா மர்வாவுக்கு இடையே ஏழு முறை சஃயு செய்து விட்டு முடியை மழித்தோ அல்லது குறைத்துக் கொண்டோ இஹ்ராமிலிருந்து விடுபடுவார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி) (ஹதீஸ்களின் தொகுப்பு சுருக்கம்)