உண்ணுவார், பருகுவார், உடன் அமருவார்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

”பனூ இஸ்ரவேலர்களிடம் முதன் முதரில் குறை எவ்வாறு ஏற்பட்டதென்றால் (அவர்களில்) ஒருவர் (தவறு செய்யும்) இன்னொருவரை சந்திக்கும்போது இன்னாரே அல்லாஹ்வை அஞ்சிக் கொள். நீ செய்து கொண்டிருக்கும் (தீய) காரியத்தை விட்டுவிடு. இது உனக்கு ஆகுமானதல்ல என்று கூறினார். பிறகு மறுநாள் அந்நபர் அதே நிலையில் இருக்க அவரை சந்தித்தார். அந்நபரு டன் சேர்ந்து உண்ணவோ பருகவோ அமரவோ அவரைத் தடுக்கவில்லை. இவர்கள் இவ்வாறு செய்து கொண்டிருக்கை யில் அவர்களில் (தீமையை தடுக்காத) சிலரது உள்ளங்களை (தீமை செய்து கொண்டிருந்த) சிலரது உள்ளங்களுடன் அல்லாஹ் சேர்த்துவிட்டான்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள். தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏக இறைவனை) மறுத்த இஸ்ராயீரின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம்.
(அல்குர்ஆன்:)
அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது. அவர்களில் அதிகமானோர் (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஏற்படுத்திக் கொள்வதை நீர் காண்கிறீர். தமக்காக அவர்கள் செய்த வினை கெட்டது. அவர் கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். வேதனையில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்:), 80)

அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும், (முஹம்ம தையும்) இவருக்கு அருளப்பட்டதையும் நம்பியிருந்தால் அவர்க ளைப் பொறுப்பாளர்களாக்கியிருக்க மாட்டார்கள். எனினும் அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
(அல்குர்ஆன்:)

பிறகு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும். அநியாயம் புரிபவனின் கைகளை பிடித்து சத்தியத் தின் பக்கமே அவனை நீங்கள் வளைக்க வேண்டும். சத்தியத் தின் பக்கமே அவனை நீங்கள் நிறுத்த வேண்டும் என்று கூறி னார்கள்.

நூல்கள் : அபூதாவுத் (3774), திர்மிதீ (2973)

இமாம் நவவீ அவர்கள் இந்த செய்தியை நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்ற23 வது தலைப்பின் கீழ் 196 வது செய்தியாக இதை பதிவுசெய்துள்ளார்கள். மேலும் இந்த செய்தி ஹசன் என்றதரத்தில் அமைந் தது என இமாம் திர்மிதி அவர்கள் கூறுவதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இப்னு மஸ்ஊத் (ரரி) அவர்களின் மகன் அபூ உபைதா என்பவர் இந்த செய்தியை தனது தந்தை இப்னு மஸ்ஊத் (ரரி) அவர்களின் வழியாக அறி விக்கிறார். அபூ உபைதா தனது தந்தையிடமிருந்து எந்த செய்தியையும் நேரடியாக செவியுறவில்லை என அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அம்ர் பின் முர்ரா என்பவர் கூறுகிறார் :

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரரி) அவர்களிடமிருந்து எதை யாவது தாங்கள் அறிவிக்கின்றீர்களா? என்று நான் அபூ உபைதா விடம் வினவினேன். அதற்கு அவர் இல்லை என்று பதிலளித் தார்.
(நூல் : தஹ்தீபுல் கமால், பாகம் : 14, பக்கம் : 62)

இவர் தனது தந்தையிடமிருந்து எதையும் செவியுறவில்லை என இமாம் திர்மிதி மற்றும் இமாம் இப்னு ஹிப்பான் ஆகியோர் கூறியுள்ளனர். (நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 5, பக்கம் : 65)

அபூ உபைதா இப்னு மஸ்ஊத் (ரரி) அவர்களிடமி ருந்து செவியுறவில்லை என்பதால் இந்த செய்தி பலவீனமாகும். 

எனினும், நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது.