08) உணவுகள் சட்ட சுருக்கம்
நூல்கள்:
சட்டங்களின் சுருக்கம்
- உண்ணக்கூடாதவைகளில் சில.
1) தாமாகச் செத்தவை (முறையாக அறுக்கப்படாமல் செத்தவை. சாகடிக்கப்பட்டவை)
2) கழுத்து நெறிக்கப்பட்டுச் செத்ததும்
3) அடிப்பட்டுச் செத்ததும்,
4) கீழே விழுந்து செத்ததும்
5) முட்டப்பட்டுச் செத்ததும்,
6) வன விலங்குகளால் சாப்பிடப்பட்டுச் செத்ததும் - உண்ண ஹலாலான பிராணி செத்துவிட்டால், வேறு வகையில் பயன்படுத்தலாம். (உதா, ஆட்டின் தோல்)
- உண்ண ஹராமாக்கப்பட்ட பிராணியை, கொழுப்பு போன்ற அதன் பிற பாகங்ளை விற்கவும், வேறு வகையில் பயன்படுத்தவும் கூடாது. (உதா, பன்றியின் கொழுப்பு)
- வேட்டை பிராணிகள் கொன்ற பிராணியை சாப்பிடலாம். (முறையாக அறுக்கப் படவில்லை என்ற பிரச்சனை இல்லை)
- வேட்டை பிராணி சாப்பிட்டிருந்தால், அதை நாம் சாப்பிடக் கூடாது.
- வேட்டை பிராணியை பிஸ்மில்லாஹ் கூறி அனுப்ப வேண்டும்
- கூறாவிட்டால் சாப்பிடக்கூடாது
- நாமாக வேட்டையாடினால் (அம்பின் முனை) கிழித்துச் சென்றால் சாப்பிடலாம். அகலவாக்கில் தாக்கியிருந்தால் சாப்பிடக் கூடாது.
- பிராணிகளைக் கம்பால், இரும்பால் அடித்துக் கொன்றால் அதை உண்ணக் கூடாது
- உயிருள்ள பிராணியின் ஒரு உறுப்பை வெட்டி சாப்பிடக் கூடாது
- இரத்தம் விலக்கப்பட்டதாகும்
- வேட்டை நாய்களால் உயிரற்ற நிலையில் பிடித்து வரப்படும் பிராணிகளுக்குள் உறைந்து போய்விட்ட இரத்தம் ஆகியவற்றுக்கு இந்தத் தடை பொருந்தாது.
- பன்றியின் மாமிசம் ஹராம்
- அல்லாஹ் அல்லாதவருக்கு அறுக்கப்பட்டவை ஹராம்.
- காலையிலும் மாலையிலும் (சிறிதளவு) பால் கிடைக்காவிட்டால் அதுவே நிர்பந்தம் ஆகும்.
- இந்நிலையில் ஹராமான எந்த உணவும் ஹலால் ஆகும். திருடப்பட்டது உட்பட.
- பொதுவான விதி
- கடல் வாழ் உயிரினங்கள் அனைத்துமே ஹலால் தான்
- மிக்லப் கொண்டு வேட்டையாடும் ஒவ்வொரு பறவையையும் ஹராம்
- கோழிக்கு மிக்லப் இருந்தாலும், அதை கொண்டு வேட்டையாடுவதில்லை.
- வீட்டுக் கழுதை ஹராம், எனினும் குதிரை ஹலால்
- கோரைப் பற்கள் உள்ள விலங்கினங்கள் அனைத்தும் ஹராம்
- புழு, பூச்சியினங்கள் அனைத்துமே ஹலால் தான்
- எனினும், விஷ ஜந்துக்கள் அனைத்தும் ஹராம்.
- கொல்லத்தக்க பிராணிகள் அனைத்தும் ஹராம். (நீர்க்காகம், எலி , பாம்பு)