94) உடலை அடக்கம் செய்தல்
நூல்கள்:
ஜனாஸாவின் சட்டங்கள்
வீடுகளில் அடக்கம் செய்யக் கூடாது
இறந்தவர்களை குறிப்பாக சிறுவர்களை வீடுகளில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் வீடுகளில் அடக்கம் செய்யும் வழக்கம் சில பகுதிகளில் நிலவுகிறது.
இந்த நம்பிக்கை தவறானதாகும். வீடுகளில் அடக்கம் செய்யக் கூடாது.
‘(கடமையில்லாத) உங்கள் தொழுகைகளில் சிலவற்றை உங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ளுங்கள். வீடுகளை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
வீடுகளை மண்ணறைகளாக ஆக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்திருப்பதால், குடியிருக்கும் வீட்டில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது.