இஸ்லாமிய நாடுகளில் நிம்மதியாக வாழும் ஹிந்துக்கள்.!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

இஸ்லாமிய நாடுகளில் நிம்மதியாக வாழும் ஹிந்துக்கள்.!

இஸ்லாமிய நாடுகளில் வாழும் ஹிந்துக்கள் என்றைக்காவது மதத்தின் பெயரால் துன்புறுத்தப் பட்டிருக்கிறார்களா.?

இஸ்லாமிய நாடுகளில் வாழும் இந்துக்களின் எண்ணிக்கை

அமீரகத்தில் 14 லட்சம்,

கத்தாரில் மூன்றரை லட்சம்,

குவைத்தில் மூன்றரை லட்சம்,

ஓமானில் இரண்டு லட்சத்து 75 ஆயிரம்,

பஹ்ரைனின் ஒரு லட்சத்து 75 ஆயிரம்,

சவுதி அரேபியாவில் 50 ஆயிரம் 

என வளைகுடா நாடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 27 லட்சத்திற்கும் அதிகமான ஹிந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஒருவராவது இஸ்லாமிய நாட்டில் வாழ்வதாக இருந்தால் ‘அல்லாஹு அக்பர்’ என சொல், எங்களைப் போல் நீயும் தொழுகை நடத்து, நோன்பு “வை” என்றேல்லாம் அழுத்தம் தரப்பட்டு எந்த காலத்திலாவது துன்புறுத்தப்பட்ட வரலாறு உண்டா?

மதசார்பற்ற, அனைத்து மதங்களும் சமம் என வகுக்கப்பட்ட அரசியல் சாசனத்தை வைத்திருக்கும் ஜனநாயக தேசமான இந்தியாவில் ஜெய் ஸ்ரீராம் சொல்லுமாறு துன்புறுத்தப் படுவதோடு மதத்தின் பெயரால் கொலைகளும் வன்முறை நிகழ்வது வாடிக்கையாகிப் போன நிலையில், மேற்கூறப்பட்ட நாடுகளோ இஸ்லாமிய நாடுகள். அவர்களின் அரசியல் சாசனத்தின் படியே இஸ்லாமிய மதம் அவர்களுக்கு கூடுதல் முன்னுரிமைக்குரியது. இஸ்லாம் கூறுகின்ற குற்றவியல் சட்டங்கள் அமலில் இருக்கும் நாடுகள் அவை. ஆனால் ஒரேயரு மத துவேஷ நிகழ்வு அங்கே நிகழ்ந்ததில்லை.

அல்லாஹ்வை நீயும் வணங்கு அல்லது இந்தியாவுக்கு திரும்பிச் செல் என ஒரு ஹிந்து, கிறுத்தவர் கூட நிந்திக்கப்பட்டதில்லை. ஏன்? ஏனென்றால், இஸ்லாமிய சித்தாந்தம் அமைதியையும் மத சகிப்புத்தன்மையையும் அடிப்படை கொள்கையாகவே முஸ்லிம் சமூகத்திற்கு போதனை செய்திருக்கிறது. உன் மார்க்கம் உனக்கு, என் மார்க்கம் எனக்கு என்பதே திருக் குர்ஆன் போதிக்கும் தாரக மந்திரம். எனவே தான் இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் கூட அதிக சலுகைகளுடனும் நிம்மதியான வாழ்வாதாரத்தை  பெற்றவர்களகவும் இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். ஒப்பீடு கூட செய்யவியலாத கீழ் நிலையில் நம் தேசம் இருப்பது வேதனைக்குரியது..!

Source: unarvu (08/02/19.)