இஸ்லாத்தை ஏற்ற “ஸீன் ஸ்டோன்”

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

இஸ்லாத்தை ஏற்ற ஸீன் ஸ்டோன்

இஸ்லாமிய மார்க்கம் நாளுக்கு நாள் வேகமாக உலகில் வாழ்கின்ற மனிதர்களின் உள்ளங்களை கவர்ந்திழுக் கின்றது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கம் உலக அளவில் பிரபல்யமாக கருதப்படுகின்ற பல நபர்களின் உள்ளங்களுக்குள் ஊடுருவி சென்று, அவர்களை இஸ்லாத்தை தழுவ செய்கின்ற காட்சிகளை கண்கூடாக பார்க்க முடிகின்றது. அந்த வரிசையில் பிரபல இயக்குனரும், உலகப் புகழ் பெற்ற ஆஸ்கார் விருது பெற்றவருமான ஆலிவர் ஸ்டோனின் மகன், “ஸீன் ஸ்டோன்” இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஈரான் மாநகரை சார்ந்த ஸீன் ஸ்டோன் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இவர் பல ஆவணப் படங்களையும், குறும் படங்களையும் தயாரித்துள்ளார். ஸீன் ஸ்டோன் தனது தந்தை ஆலிவர் ஸ்டோன் தயாரிப்பில் சிறு வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார். ஸீன் ஸ்டோன் 1980 மற்றும் 1990 துவக்கத்தில் வியட்நாம் போர் தொடர்பான படங்களை தயாரித்துள்ளார். இந்த திரைப்படங்கள் மக்களிடத்தில் அதிகப் படியான வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும், இவர் திரைப்படம் பெரு மளவில் வரவேற்பை பெட்ரா காரணத்தினால், மூன்று அகாடமிக் விருதுகளையும் பெற்றார்.

ஈரானில் உள்ள இஸ்பஹான் என்ற பகுதியில் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகவும், இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதாகவும் பகிரங்கமாக அறிவித்தார். மேலும் அந்த இடத்திலேயே கலிமாவை தன்னுடைய நாவினால் மொழிந்தார். அல்ஹம்துலில்லாஹ்!!

ஸீன் ஸ்டோன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்ற செய்தி பரவிய குறிப்பிட்ட சில நாட்களிலேயே அவருக்கு கடுமையான எதிர்ப்பலைகளும், எதிர்ப்பாளர்களும் கிளம்ப ஆரம்பித்தனர். ஆனால் எந்த எதிர்ப்பு களுக்கும், சோதனை களுக்கும் அஞ்சாத ஸீன் ஸ்டோன் கூறியதாவது; இறைவன் நாடினால் இஸ்லாத்திலேயே என்னுடைய ஒட்டு மொத்த வாழ்நாளும், மரணமும் அமைந்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப் படுகின்றேன்! என்று கூறி மெய் சிலிர்க்க வைத்தார். மேலும் ஸீன் ஸ்டோன் என்ற தனது பெயரை அலி என்று மாற்றிக் கொண்டார். அல்லாஹ் இவரது பாதங்களை உறுதிப் படுத்துவானாக!

Source: unarvu (16/08/19.)