இஸ்லாத்தை ஏற்ற ராப் பாடகி “டைம்ஸ்”
இஸ்லாத்தை ஏற்ற ராப் பாடகி “டைம்ஸ்”
ஒவ்வொரு நாளும் இஸ்லாமிய மார்க்கத்தில் உலகளாவிய அளவில் சாரைசாரையாக மக்கள் இணைந்துக் கொண்டு இருக்கிறார்கள். என்பது குறித்து ஏராளமான புள்ளி விபரங்கள் எடுத்துரைக்கின்றது. அந்த வரிசையில் ஃபிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவரான ஜார்ஜியாடஸ் என்ற இயற்பெயர் கொண்ட மக்களால் “டயம்ஸ்” என்று அழைக்கப்படுகின்ற பிரபல்யமான பெண்மணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.
ஃபிரான்ஸ் நாட்டை சார்ந்த இவர் மிகச் சிறந்த ராப் இசை பாடகி ஆவார். பலதரப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் முன்னணி திரைப்படங்கள் இவரது பாடலின் மூலமாகவே மக்களிடத்தில் பெரும்பகுதியான வரவேற்பை பெற்றுருக்கிறது.உச்சகட்ட வெற்றியையும் எட்டிருக்கின்றது. இவருக்கு இஸ்லாத்தின் மீது எவ்வாறு தாக்கம் ஏற்பட்டது என்ற சுவாரஸ்யமான செய்தியை அவர் குறிப்பிடும்போது;
ஃபிரான்ஸ் பாடகியான டைம்ஸ்க்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டு அமைதியைத் தேடி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த போது, இவரது தோழி செய்த வித்தியாசமான அணுகுமுறை இவரை வெகுவாக கவர்ந்திழுத்தது.அதாவது தனது இஸ்லாமிய தோழியுடன் டயம்ஸ் பேசிக் கொண்டிருந்த போது, தொழுகைக்கு நேரமாகி விட்டது. நான் தொழுது விட்டு வருகின்றேன் என்று சொன்ன போது, இவருக்கும் ஆசை ஏற்பட்டு, நானும் தொழுகைக்கு வரட்டுமா? என்று கேட்டிருக்கிறார். உடனே முஸ்லீம் தோழி மறுக்காமல் தன்னுடன் தொழுகைக்கு அழைத்து சென்று இருக்கின்றார்.
தனது முஸ்லீம் தோழியை பார்த்து தொழுகையை நிறைவேற்றிய டயம்ஸ், திடீரென்று தன்னுடைய நெற்றியை வைத்து சிரம் பணியும் போது ஒருவிதமான இனம்புரியாத ஒரு மாற்றம் தனக்குள் ஏற்பட்டதை உணர்ந்தார். இதன் மூலம் சிரம் தாழ்த்தி தலை வணங்குவது இறைவனுக்கு மட்டுமே தவிர வேறு யாருக்கும் இல்லை என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. பிறகு மொரிஸியஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள நேர்ந்த போது திருக்குர்ஆனை தன்னுடன் எடுத்துச் சென்றார்.
தனிமையில் அமர்ந்து திருக்குர்ஆனை படிக்க ஆரம்பித்தார். ஏராளமான மாற்றங்கள் தன்னுள் ஏற்பட்டதை உணர்ந்தார். ஒரு உண்மையை உணர்ந்து கொண்டார். ஒரு கடவுள் மட்டும் தான் இருக்க முடியும் என்ற தீர்க்கமான முடிவெடுத்து ஆழ்ந்த நம்பிக்கை கொண்டார். மேலும், தன்னுடைய உடலையும், மானத்தையும் மறைக்கும் கேடயமான ஃபர்தாவை அவர் முழுமையாக கடைபிடிக்க ஆரம்பித்து விட்டார். திருக்குர்ஆனின் போதனைகள் டயம்ஸ் அவர்களின் ஆள் மனதை தொட்டு விட்டது.
அவருக்கு நேர்வழி கிடைத்து விட்டது. இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். 2019 ஆம் ஆண்டான இந்த ஆண்டு புனித ஹஜ் கடமையை நிரைவேற்றியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! உண்மையாகவே திருக்குர்ஆனை படிக்கின்ற அத்துணை நபர்களின் உள்ளங்களையும் திருக்குர்ஆன் தன்னுடைய ஆழ்ந்த போதனைகளால், ஆழமான கருத்துக்களினால் நிச்சயம் வென்று காட்டும் என்பதே நிதர்சனமான உண்மை.
Source: unarvu (06/09/19.)