இஸ்லாத்தை ஏற்ற கால்பந்து வீரர் “டேனி பிளம்”

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

இஸ்லாத்தை ஏற்ற கால்பந்து வீரர் “டேனி பிளம்”

இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு தங்களின் புதிய வாழ்க்கைப் பயணத்தை தொடர்கின்ற செய்தியை தொடர்ச்சியாக அறிந்து வருகின்றோம். அந்த வரிசையில் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த இளம் ஜெர்மன் கால்பந்து வீரர் “டேனி பிளம்” இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்தார்.மேலும் டேனி பிளம் இஸ்லாம் குறித்த தனது முதல் வார்த்தையாக அவர் கூறும் போது, இஸ்லாம் என்பது தூய நம்பிக்கை மற்றும் வலிமையின் மார்க்கம்.

இஸ்லாம் எனக்கு வித்தியாசமான வலிமையைத் தருகின்றது. மேலும், இஸ்லாம் எனது ஆத்மாவை அமைதிப்படுத்துகிறது “நான் குறுகிய மனநிலையுடனும், ஒழுங்கற்றவனாகவும் இருந்தேன். நான் எந்த சூழலில் இவ்வளவு வருட காலம் வாழ்ந்து கொண்டிருந்தேன் என்பது எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.“நான் ஒரு மசூதியை பார்வையிட்டேன், நான் உடனடியாக இதயத்தை உயர்த்தினேன். இது எனக்கு ஏதோ இனம்புரியாத காரியமாக என்னுள் நான் உணர்ந்தேன்.

மேலும் இஸ்லாம் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள விரும்பினேன், ”என்று பிளம் பில்டிடம் கூறினார். இந்த வித்தியாசமான உணர்வுகளுக்கு பிறகு, பள்ளிவாசலுக்கு சென்று ஐந்து நேரத் தொழுகைகளை சரியான முறையில் நிறைவேற்ற ஆரம்பித்தார். மேலும், இறைவனுக்காக சரியான முறையில் அறுத்த ஹலாலான உணவுகளை சாப்பிட ஆரம்பித்தார். இதற்கு பிறகு, தனது முடிவை தனது பெற்றோருக்கு தெரிவித்த 24 வயதான டேனி பிளம், ஆரம்பமாக தனக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று பயப்படுவதாக கூறினார்.

Source: unarvu (13/09/19.)