இன்றைய இளைஞர்களின் நிலை.!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2
முன்னுரை

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

மனித வாழ்க்கை பல பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத, யாரையும் எவரையும் சார்ந்து நிற்காத இளமைப் பருவம். ஒரு நாற்பது வயது வரை அதை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான். அதன் பிறகு முதுமைப் பருவம்.

இளமை பருவத்தில் தான் ஒரு மனிதனுக்கு தவறிழைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அந்த கால கட்டத்தில் தான் மனிதன் நல்லது, கெட்டது போன்வற்றை அறிகிறான். பல்வேறு நற்செயல்களையும், தீய பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தி கொள்கிறான். அத்தகைய இளைய பருவத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இந்த உரையில் காண்போம்.. மனித பருவங்களைப் பற்றி அல்லாஹ் பின்வறுமாறு எடுத்துரைக்கிறான்.

இளமைப் பருவம்.
 اَللّٰهُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ ضُؔعْفٍ ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ ضُؔعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ قُوَّةٍ ضُؔعْفًا وَّشَيْبَةً  ‌ؕ يَخْلُقُ مَا يَشَآءُ ‌ۚ وَهُوَ الْعَلِيْمُ الْقَدِيْرُ‏

பலவீனமான நிலையில் உங்களை அல்லாஹ் படைத்தான். பின்னர் பலவீனத்திற்குப் பின் பலத்தை ஏற்படுத்தினான். பின்னர் பலத்துக்குப் பின் பலவீனத்தையும், நரையையும் ஏற்படுத்தினான். அவன் நாடியதைப் படைப்பான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன்: 30:54)

இளைமை பருவத்தை வணக்கத்தை அல்லாஹ்வுக்காக கழித்த மனிதர்
سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்புபடுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்,

உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்’

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 660)

நீதி வழங்கப்படக்கூடிய மறுமை நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம்பெற கூடிய வாய்ப்பு இளைஞர் பருவத்தில் செய்யக்கூடிய செயல்களுக்கு கிடைக்கின்றது. அந்நிலையில் தான் ஒவ்வொரு மனதும் தள்ளாடக்கூடிய பருவம். அதில் நன்மையான காரியங்களில் ஈடுபட்டு அதற்கேற்ப நடந்து கொண்டால் இம்மையிலும் மட்டுமல்லாது மறுமையிலும் கூட வெற்றி பெற கூடும். 

மதுவில் இளைஞர்கள்
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

(அல்குர்ஆன்: 5:90)

மதுவிலிருந்து விலக கடுமையான எச்சரிக்கை
مَنْ شَرِبَ الْخَمْرَ وَسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا، وَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ، فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ، وَإِنْ عَادَ، فَشَرِبَ، فَسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا، فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ، فَإِنْ تَابَ، تَابَ اللَّهُ عَلَيْهِ، وَإِنْ عَادَ، فَشَرِبَ، فَسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا، فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ، فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ، وَإِنْ عَادَ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ، أَنْ يَسْقِيَهُ مِنْ رَدَغَةِ الْخَبَالِ، يَوْمَ الْقِيَامَةِ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا رَدَغَةُ الْخَبَالِ؟ قَالَ: «عُصَارَةُ أَهْلِ النَّارِ»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் மதுவை அருந்துகிறாரோ அவருடைய நாற்பது நாட்கள் தொழுகை நிறைவேறாது. அவர் அதற்காக மன்னிப்பு கேட்டு திரிந்துகிறார். திரும்ப அவர் மதுவை அருந்துகிறார். திரும்ப அல்லாஹ்வுடன் பாவ மன்னிப்பு கேட்கிறார். திரும்ப மூன்றாவது முறையாக மது அருந்துகிறார். திரும்ப பாவ மன்னிப்பு கேட்கிறார்.

மூன்று தடவைக்கு மேல் நான்காவது முறை மது அருந்தினால் அவருக்காக அல்லாஹ் அம்மனிதருக்கு மறுமையில் ரதஹத்தில் கபால் என்ற மதுவை கடமையாக்குகின்றான். உடனே, ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே! ரதஹத்தில் கபால் என்றால் என்ன என்று கேட்கின்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது நரகவாசிகள் சீழும், சலுமும் தான் என்று கூறினார்கள்.

(நூல்: (இப்னு மாஜா: 3377) )

மதுவை பற்றி மிக கடுமையாக அல்லாஹ் எச்சரித்துள்ளான். ஆனால், இன்று அதிகமானோர் எவ்வித வயது வரம்பின்றி சிறுவர்கள் முதல் முதியோர் வரை மது அருந்த கூடிய பரிதாப நிலையில் தான் உள்ளனர். அதற்கு அடிமையாக மாறி தான் என்ன செய்கிறோம் என்பதை கூட தெரியாமல் தள்ளாடி சாலையோரத்தில் விழுந்து கிடக்கின்றனர்.

அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு கூட இல்லாமல் இருக்கின்றனர். மகிழ்ச்சியான தருணத்திலும், மனம் சோர்வடைந்த நிலையிலும், விடுமுறை நாட்களிலும் ஏதாவது காரணம் சொல்லி மதுவிற்கு அடிமையாகின்றனர். நாளை மறுமை நாளில் அல்லாஹ்வின் தண்டனையோ மிக கொடியது. அதனை எந்நிலையிலும் உணர்ந்து அதனை அடியோடு விட்டொழிக்க வேண்டும். 

ஒரே வசனத்தில் ஒழிக்கப்பட்டது
كُنْتُ سَاقِيَ القَوْمِ فِي مَنْزِلِ أَبِي طَلْحَةَ، فَنَزَلَ تَحْرِيمُ الخَمْرِ، فَأَمَرَ مُنَادِيًا فَنَادَى، فَقَالَ أَبُو طَلْحَةَ: اخْرُجْ فَانْظُرْ مَا هَذَا الصَّوْتُ، قَالَ: فَخَرَجْتُ فَقُلْتُ: هَذَا مُنَادٍ يُنَادِي: «أَلاَ إِنَّ الخَمْرَ قَدْ حُرِّمَتْ»، فَقَالَ لِي: اذْهَبْ فَأَهْرِقْهَا، قَالَ: فَجَرَتْ فِي سِكَكِ المَدِينَةِ، قَالَ: وَكَانَتْ خَمْرُهُمْ يَوْمَئِذٍ الفَضِيخَ، فَقَالَ بَعْضُ القَوْمِ: قُتِلَ قَوْمٌ وَهْيَ فِي بُطُونِهِمْ، قَالَ: فَأَنْزَلَ اللَّهُ: {لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا} [المائدة: 93]

(மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரிச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும். (மதுபானம் தடைசெய்யப்பட்ட நாளில்) நான் அபூதல்ஹா (ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது மது விலக்கிற்கான இறைவசனம் அருளப்பட்டது.

உடனே நபி (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு, (மது தடைசெய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்திரவிட்டார்கள். அவர் அவ்வாறே அறிவித்தார். இதைக் கேட்டதும் அபூதல்ஹா (ரலி), ‘வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா)’ எனக் கூறினார்கள்.

உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்துவிட்டுத் திரும்பி வந்து), ‘இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மதுபானம் தடைசெய்யப்பட்டுவிட்டது என்று அறிவித்தார்’ என்று சொன்னேன். அதற்கு அபூதல்ஹா (ரலி) என்னிடம்,’நீ போய், இதைக் கொட்டிவிடு!’ என்று கூறினார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களின் மதுபானம் (பழுக்காத) பேரிச்சங்காய் மதுவாக இருந்தது.

அப்போது மக்களில் சிலர், ‘(உஹுதுப் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே!’ என்று கூறினார். அப்போதுதான் ‘இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில் ) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்களின் மீது (அது) குற்றமாகாது.’ எனும் (அல்குர்ஆன்: 05:93) வது இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
நூல்: (புகாரி: 4620)

உலக வாழ்கை திருப்பி விட வேண்டாம்
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ‌ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசைதிருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நட்டமடைந்தவர்கள்.

(அல்குர்ஆன்: 63:9)

இவ்வுலகில் மனிதர்களில் சிலர் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அதிக கவனம் மேற்கொண்டு அதை எவ்வாறு பெருக்க வேண்டும் என்றும், எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்றும் நினைத்து அல்லாஹ்வை நினைப்பதை பற்றியும், வணங்குவதை பற்றியும் நினைக்க மறக்கின்றனர். அவ்வாறு செய்வதினால் மனிதன் தன்னை தானே நஷ்டப்படுத்தி கொள்வதாக அல்லாஹ் கூறுகிறான். எதிலும் ஒரு அளவு நிர்ணயம் வேண்டும். 

பார்வையை எப்படி பாதுகாப்பது
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ
وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ ؕ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏‏

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.

தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன்: 24:30-31)

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்கள் தங்களின் பார்வையை எவ்வாறு தாழ்த்தி கொள்ள வேண்டும் என்று திருமறை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். அதிலே ஒரு குறிப்பிட்ட மஹ்ரமானவர்களை தவிர அனைவரும் கடைபிடிக்க பிடிக்க வேண்டிய சட்டமாகும். 

இளைஞர்கள் ஒழுக்கமாக வாழ திருமணமே வழி
دَخَلْتُ مَعَ عَلْقَمَةَ، وَالأَسْوَدِ عَلَى عَبْدِ اللَّهِ، فَقَالَ عَبْدُ اللَّهِ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَبَابًا لاَ نَجِدُ شَيْئًا، فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:
நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் ‘இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் (ரஹ்)
நூல்: (புகாரி: 5066) 

இன்று இளைஞர்கள் சிலர் தங்களுடைய மனோயிச்சையின் காரணமாக காதல் என்ற கூட்டுக்குள் அடைந்து திருமணம் முடிக்காமலே திருமணம் முடிந்த தம்பதிகள் போல் வாழ்கின்றனர். அவ்வாறு ஒழுக்கம் கெட்டு வாழாமல் திருமணம் முடிப்பதே சரியானதாகும். அதுவே மானக்கேடான விஷயத்திலிருந்து நம்மை பாதுகாக்கும்.

தாம்பத்தியம் நடத்த சக்திபெறாதோர் நோன்பு நோற்கட்டும்!
 وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ

(அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் (ரஹ்)
நூல்: (புகாரி: 5066)

அர்ஷின் நிழல் (விபச்சாரத்திலிருந்து விலகியவருக்கு கிடைக்கும்)
سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்’

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 660) 

யூசுப் நபி செய்த பிரார்த்தனை சம்பவம்
قَالَ رَبِّ السِّجْنُ اَحَبُّ اِلَىَّ مِمَّا يَدْعُوْنَنِىْۤ اِلَيْهِ‌ۚ وَاِلَّا تَصْرِفْ عَنِّىْ كَيْدَهُنَّ اَصْبُ اِلَيْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِيْنَ
فَاسْتَجَابَ لَهٗ رَبُّهٗ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ‌ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

என் இறைவா! இப்பெண்கள் அழைப்பதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப்பாற்றாவிட்டால் இவர்களை நோக்கிச் சாய்ந்து, அறிவீனனாக ஆகி விடுவேன்” என்றார். இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அவர்களின் சூழ்ச்சியிலிருந்து அவரைக் காப்பாற்றினான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 12:33-34)

பெண்கள் எப்படி இருக்க வேண்டும்
يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يُّعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 33:59)

விபச்சாரம் செய்யும் உறுப்புகள்
 فَالْعَيْنُ زِنْيَتُهَا النَّظَرُ، وَيُصَدِّقُهَا الْأَعْرَاضُ، وَاللِّسَانُ زِنْيَتُهُ الْمَنْطِقُ، وَالْقَلْبُ التَّمَنِّي، وَالْفَرْجُ يُصَدِّقُ مَا ثَمَّ وَيُكَذِّبُ

இரண்டு கண்களும் விபச்சாரம் செய்கிறது; இரண்டு கைகளும் விபச்சாரம் செய்கிறது; நாவுகளும் விபச்சாரம் செய்கிறது; இரண்டு கால்களும் விபச்சாரம் செய்கிறது; மர்ம உறுப்பு அதை உண்மைபடுத்தும் அல்லது பொய்படுத்தும்.

நூல்: (அஹ்மத்: 8215) (8843)

இன்று நம்மில் நிறைய பேர் கைபேசி இல்லாதவரே கிடையாது. அதிலும் இணையதளங்களை உபயோகிக்க கூடிய ஆண்ட்ராய்டு என்று சொல்லக்கூடிய அதிநவீன வசதிகள் கொண்ட கைபேசியை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் வைத்திருப்பதை நாம் பார்க்கின்றோம். புதிய கண்டுபிடிப்புகள் வரவேற்கக்கூடியவைதான்.

ஆனால், அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் யாரையும் பாதிக்க கூடாது. ஆனால், இன்று சிறுவர் முதல் பெரியவர் வரை யாரும் முகநூல் பயன்படுத்தாத நபரே கிடையாது எனலாம். அதிலும், அந்நிய ஆணுடனும், அந்நியப் பெண்ணுடனும் பேசி தொடர்பை ஏற்படுத்தி கொள்கின்றனர். அதுவே கை செய்யும் விபச்சாரமாகும். 

பெண்கள் சோதனை ( ஆண்களுக்கு)
مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யும் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை.

அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத் (ரலி)
நூல்: (புகாரி: 5096) 

மெல்லிய ஆடையை அணிபவருக்கு கிடைக்கும் தண்டனை
صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ …

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு கூட்டத்தாரை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை! அவர்களில் ஒரு சமூகத்தார் பசுமாட்டை அடித்து ஓட்டிக் கொண்டு செல்வது போல் மக்களை ஓட்டிக் கொண்டு செல்வார்கள்; மற்றொருவர் ஆடையணிந்தும் நிர்வாணமாக காட்சியளிப்பார்கள். தன் பக்கம் கவர்ச்சியாக இழுக்கக்கூடிய பெண்களாக அவர்கள் இருப்பார்கள். இவர்கள் இருவரும் சுவர்க்கம் செல்ல முடியாது.

(நூல்: (முஸ்லிம்: 4316)

(அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: இவ்வுலக வாழ்க்கை பசுமையானதும், இனிமையானதும். இவ்வுலக வாழ்க்கைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். மேலும்,பெண்களுடைய விஷயங்களிலும் அஞ்சிக் கொள்ளுங்கள்)….

ஏனென்றால், பனீ இஸ்ராயீல் குலத்தாருக்கு முதன்மையான சோதனையாக அல்லாஹ் வைத்திருந்தது பெண்களைத்தான். அவர்கள் அழிந்து போனதற்கு காரணமாக இருந்தது பெண்கள்தான். இதனை இறைத்தூதர் அவர்களும் கூறியுள்ளார்கள்: எனக்கு பின்னால் ஆண்களுக்கு மிகப்பெரும் சோதனையாக பெண்களை மட்டும் தான் நான் விட்டு செல்வதாக கூறியுள்ளார்கள்….

ஆகவே, இளமை பருவத்தை ஒருவர் அடையும் போது ஏற்படக்கூடிய நல்லது, கெட்டது அனைத்தையும் நன்கு பரிசீலித்து நல்லதையே தேர்ந்தெடுத்து நபிகளார் காட்டித்தந்த வழிமுறையை அப்படியே பின்பற்றி வாழ நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். நமக்கு பின்னால் வரக்கூடிய சமூகத்தாருக்கும் இதனையே போதிக்க வேண்டும். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.