1) முன்னுரை

நூல்கள்: இறைவனிடம் கையேந்துங்கள்

பி.ஜைனுல்ஆபிதீன்

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

நம்மைப் படைத்த ஓர் இறைவனை மட்டும் தான் வணங்க வேண்டும் எனும் போது,அவனிடம் தான் நமது தேவைகளைக் கேட்க வேண்டும். ஏனெனில், பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே பிரார்த்தனை என்ற இந்த வணக்கத்தை, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செய்து விடக் கூடாது.

இயல்பாகவே மனிதன் தேவையுள்ளவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். எந்தத் தேவையுமற்ற இறைவனிடம் நமது தேவைகளை முறையிடுவது தான் பிரார்த்தனை என்ற அடிப்படையைக் கூட அதிகமான மக்கள் விளங்காமல் உள்ளனர்.

தாங்களாகவே செய்து கொண்ட கற்சிலைகளிடமும், இறந்து விட்ட பெரியார்களின் சமாதிகளிலும் போய் பிரார்த்திக்கின்றனர். இதற்குக் காரணம், இறைவனின் பண்புகளைப் பற்றியும், அவனது வல்லமை பற்றியும் அறியாமல் இருப்பது தான்.

எனவே இறைவனின் பண்புகளை எடுத்துக் காட்டி, அவனிடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும் என்பதை விளக்குவதுடன், இறைவனிடம் நமது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கான நிபந்தனைகள் என்ன? அதற்கு இடைத்தரகர்கள் தேவையா?என்பன போன்ற அம்சங்களையும்

இந்நூலில் கீழ்க்காணும் தலைப்புக்களில் விளக்கியுள்ளோம்.
  • பிரார்த்தனை தான் வணக்கம்
  • இறைவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும்
  • இறைவன் அருகில் இருக்கிறான்
  • பிரார்த்தனையின் ஒழுங்குகள்
  • ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும்
  • அவசரப்படக் கூடாது
  • பாவமானதைக் கேட்கக் கூடாது
  • மரணத்தைக் கேட்கக் கூடாது
  • இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல்
  • மகான்கள் பொருட்டால் கேட்கக் கூடாது
  • வலியுறுத்திக் கேட்க வேண்டும்
  • அனைத்தையும் கேட்க வேண்டும்
  • இரகசியமாகவும், பணிவாகவும்
  • இரவின் கடைசி நேரம்
  • ஸஜ்தாவின் போது
  • மறைமுகமாகச் செய்யும் பிரார்த்தனை
  • தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ
  • பிரார்த்தனைக்குப் பலன் தெரியாவிட்டால்
  • இறைவனிடம் கையேந்துங்கள்!