இறைத்தூதர் இறக்கவில்லையா?
இறைத்தூதர் இறக்கவில்லையா?
அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் ஒரு பரேலவியாவார். மக்கள் பரேலவிசத்திலிருந்து படிப்படியாக விலகி வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சரியான பாதைக்கு, சத்திய வழிக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை சமாதி வழிபாட்டிலும் அசத்திய வழிகேட்டிலும் கொண்டு போய் தள்ளி விடுவதற்கு சகலவிதமான தகிடுதத்தங்களை, தப்பர்த்தங்களைச் செய்து கொண்டிருப்பவர் தான் இந்த அப்துல்லாஹ் ஜமாலி.
அவர் அண்மையில் பரேலவிச பரிவாரத்தின் பல கடவுள் கொள்கை கொண்ட ஒரு பத்திரிகையில், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை; உயிருடன் தான் உள்ளார்கள் என்ற ஒரு பயங்கர வாதத்தை வைத்துள்ளார். இது குர்ஆனுக்கு எதிரான யுத்தப் பிரகடனமாகும். அப்பட்டமான இறை நிராகரிப்பு வாக்குமூலமாகும்.
அவரது இந்தக் கூற்றை நம்பி, அவரது பாட்டையில் செல்பவர் நிரந்தர நரகப் படுகுழியில் வீழ்ந்து விடுவார் என்பதால் இந்த நரகத்தின் ஏஜெண்டிடமிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவரது இந்த அபத்தங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுகிறோம். அப்துல்லாஹ் ஜமாலியின் அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
அல்லாஹ்வின் திருத்தூதரான நபி அவர்கள் முஃமின்களுக்கு அவர்களின் உயிர்களை விடவும் மேலானவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 33:6) ➚
இவ்வசனத்தின் மூலம் பயனுள்ள பல பாடங்களை அல்லாஹ் நமக்குச் சொல்லித் தருகிறான்.
தன்னை ஒரு முஃமின் என்று பறைசாற்றிக் கொள்ளும் ஒவ்வொருவரும் தன்னுடைய உயிரைவிடவும் உயர்ந்தவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும். அவ்வாறு மதிக்காதவன் உண்மையான முஃமின் அல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மைப் போன்றவர்களல்ல. நமது உயிரை விடவும் உயர்ந்தவர்கள்.
ஆனால் நம்மிலே புறப்பட்டிருக்கின்ற ஒரு கூட்டம் நன்றாய் கதை அளந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் உள்ளங்களில் விஷ விதைகளைத் தூவப் பார்க்கின்றது. அவற்றில் ஒன்று:
நபிகள் நாயகம் (ஸல்) நம்மைப் போன்றவர்களே!
இதைக் கூறுகின்ற போது அவர்களின் தொனியில் அலட்சியம் தென்படுகின்றது. இதைக் கேட்கின்ற உண்மையான முஃமின் உள்ளம் புண்படுகின்றது.
இந்த அபத்தமான கூற்றுக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பதில் கொடுத்துவிட்டார்கள்.
உங்களில் யாரும் என்னைப் போன்றில்லை.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ, முஸ்லிம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியது யாரைப் பார்த்து? ஸஹாபாப பெருமக்களைப் பார்த்து. ஸஹாபா பெருமக்கள் யார்?
நபிமார்களுக்கு அடுத்த மனித சமுதாயத்தில் மிகச் சிறந்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள். இவர்களைப் பற்றி இறைவன் கூறுவதாவது:
இறைவன் இவர்களைப் பொருந்திக் கொண்டான். இவர்களும் இறைவனைப் பொருந்தினார்கள். (அல்குர்ஆன்: 98:8) ➚
இத்தனை சிறப்பும், உயர்வும் பெற்றுள்ள ஸஹாபா பெருமக்களே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போன்றில்லை என்கிறபோது, தற்போது புறப்பட்டிருக்கிற இக்கூட்டம் எம்மாத்திரம்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் நமக்குமிடையே இருக்கின்ற வேறுபாடுகள் ஏராளம். அதற்குண்டான ஆதாரங்கள் தாராளம்.
நமது விளக்கம்
அல்லாஹ்வின் தூதரை மதிப்பது என்றால் அவர்களுடைய கட்டளையை முழுமையாகப் பின்பற்றுவது தான் என்று திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது.
“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!
ஆனால் நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கின்றோம் என்று சொல்கின்ற இந்த பரேலவிச (ஆ)சாமிகள் நபி (ஸல்) அவர்களது கட்டளைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டனர்.
நபி (ஸல்) அவர்கள் மாற்றுமதக் கலாச்சாரம் கூடாது என்று கூறினால் இவர்கள் கோயில் திருவிழாக்களைப் பின்பற்றி சந்தனக்கூடு, யானை வழிபாடு என அத்தனையும் செய்கின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் ஆட்காட்டி விரலை அசைத்தார்கள் என்ற ஹதீஸை நாம் செயல்படுத்தினால் அதை இவர்கள் பின்பற்றாவிட்டாலும் பரவாயில்லை, அதைச் செயல்படுத்துபவர்களை நரம்புத் தளர்ச்சி என்று கேலியும் கிண்டலும் செய்கின்றார்கள். இவர்கள் தான் நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிச்கிறார்களாம்.
அதே சமயம் இவர்கள் விரலை வெட்டி விடுவோம் என்று சொன்னாலும், உயிரை எடுத்து விடுவோம் என்று சொன்னாலும் அதற்கு அஞ்சாமல் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அந்த நபிவழியை செயல்படுத்துகின்றனர். யார் நபியை உயிரினும் மேலாக மதிக்கின்றார்கள்; யார் அவமதிக்கின்றார்கள் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
மநாபி (ஸல்) அவர்கள் மனிதரே!
நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் என்று நாம், நமது சுய விருப்பப்படி கூறுவது போல் ஒரு போலித் தோற்றத்தை இந்த பரேலவி பயங்கரவாதி ஏற்படுத்துகின்றார்.
உண்மையில் இது எல்லாம் வல்ல அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்ற கூற்றாகும்.
“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
இதைத் தான் நாம் கூறுகின்றோம். நமக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் உள்ள வேறுபாடு வஹீ என்ற இறைச்செய்தியாகும். அந்த உயர்ந்த தகுதியை இந்த உலகத்தில் அவர்களுக்குப் பின் வேறு யாரும் பெற முடியாது என்று அடித்துச் சொல்கிறோம். இப்படிக் குர்ஆன் கூறுகின்ற வேறுபாட்டுடன் புரிந்திருக்கின்ற நம்மைத் தான் சுய விருப்பத்தின் அடிப்படையில் கூறுவதாக விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர். இதிலிருந்து இவர்களது விஷமத்தனத்தை, விஷச் சிந்தனையைப் புரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் இல்லை என்பதற்கு புகாரியிலிருந்து ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வந்துள்ளார்கள். அந்த ஆதாரத்திலும் அவர்கள் ஒரு பயங்கர மோசடியைச் செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியைச் சொல்லிவிட்டு, மற்றொரு பகுதியை இருட்டடிப்பு செய்துள்ளனர்.
இது தொடர்பாக புகாரியில் இடம்பெறும் ஹதீஸைப் பார்ப்போம்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்!” என்று (மக்களிடம்) கூறியபோது, “நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?’ என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் (எல்லா விஷயங்களிலும்) உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்” என்றோ “உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவுப் பொழுதைக் கழிக்கிறேன்” என்றோ கூறினார்கள்.
இந்த ஹதீஸ் புகாரியில் 1922, 1962, 1963, 1964, 1965, 1966, 1967, 6851, 7241, 7242, 7299 ஆகிய எண்களிலும் முஸ்லிமில் பல இடங்களிலும் பதிவாகியுள்ளது.
இவை அனைத்திலும், எனக்கு என்னுடைய இறைவன் உணவளிக்கிறான்; குடிப்பதற்குத் தண்ணீரும் கொடுக்கின்றான் (அதாவது, நான் பட்டினி கிடக்கவில்லை) என்பதையும் சேர்த்தே சொல்கின்றார்கள். இதை வசதியாக, தங்களுக்குச் சாதகமாக மறைத்துவிட்டு ஹதீஸ் முதல் பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளனர். ஹதீஸில் உள்ளதை மறைப்பது மோசடியாகும்.
இத்தகைய மோசடி செய்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், மலக்குகள், நபிமார்களுடைய சாபமும் இறங்குகின்றது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.
இதிலிருந்து இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
இப்போது நபி (ஸல்) அவர்கள் மனிதர் தான் என்பதற்கான குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் பார்ப்போம்.
வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், இவர்களாகவே நபி (ஸல்) அவர்கள் மனிதர் அல்ல என்று முடிவெடுத்துவிட்டு அதற்குத் தக்க குர்ஆன், ஹதீஸை வளைக்க முயற்சிக்கின்றனர். அதற்குத் தான் ஹதீஸின் ஒரு பகுதியை விட்டு விட்டு, மற்றொரு பகுதியை மட்டும் ஆதாரமாக எடுக்கின்றனர். ஆனால் அல்லாஹ் தெளிவாக, முஹம்மத் (ஸல்) அவர்கள் மனிதர் தாம் என்று ஆணித்தரமாகச் சொல்கின்றான்.
மர்யமுடைய குமாரர் ஈஸா (அலை) அவர்களை கிறித்தவர்கள் கடவுளாக ஆக்கிவிட்டனர். இதை அல்லாஹ் கண்டிக்கிறான்.
மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!
ஈஸா நபி அவர்களும், அவர்களது தாயாரும் மனிதர்கள் தான். அவர்களுக்குப் பசி, தாகம் இருந்தது. அதனால் உணவு சாப்பிட்டார்கள். சாப்பிட்ட அவர்கள் மல, ஜலம் கழித்தார்கள். அவ்விருவரும் கடவுளாக முடியாது என்பதற்கு இவ்விரு குறைபாடுகளையும் ஆதாரமாகக் காட்டுகின்றான். உணவு உட்கொள்ளுதல் என்பது நேர்முக ஆதாரம். சாப்பிட்டு விட்டு மலஜலம் கழித்தாக வேண்டும் என்ற மறைமுக ஆதாரத்தையும் மக்களுக்குப் புரியும் படி தெளிவாக இறைவன் குறிப்பிடுகின்றான்.
இதே விஷயத்தைத் தான் நபி (ஸல்) அவர்களுக்கும் திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
“இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர்.
நபி (ஸல்) அவர்களும் உணவு சாப்பிடுபவர் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இங்கு நபி (ஸல்) அவர்கள் உணவு சாப்பிடுபவர்கள் என்று நேரடியாகவும், மலஜலம் கழிப்பவர்கள் என்று மறைமுகமாகவும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
சாப்பிடுபவர் கடவுளாக இருக்க முடியாது என்ற ஆதாரம் இதில் பெறப்படுவதுடன் நபி (ஸல்) அவர்கள் மனிதர் தாம் என்ற கருத்தையும் இவ்வசனம் தெளிவாக விளக்குகின்றது.
நபிவழிச் சான்றுகள்
அல்குர்ஆனில் இதுபோன்று ஏராளமான சான்றுகள் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்றைக் கூறியுள்ளோம். இனி, ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் மனிதர் தாம் என்பதற்குரிய சான்றுகளைப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் தம்மை மனிதர் என்று பல்வேறு இடங்களில் பதிவு செய்கின்றார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (லுஹ்ரையோ அஸ்ரையோ வழக்கத்திற்கு மாறாகத்) தொழுதார்கள்.
-(இதன் அறிவிப்பாளர்கüல் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியவர்கள் (அத்தொழுகை யின் ரக்அத்தை) கூடுதலாக்கினார்களா அல்லது குறைத்துவிட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.-
(தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்தபோது அவர்கüடம், “இந்தத் தொழுகையின்போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்?)” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்)” என்றனர்.
உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இருப்பில் உட்கார்வது போன்று) தமது காலை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள். இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பியபோது, “ஓர் விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் மாற்றங்க(ளை அறிவிக்கும் இறை அறிவிப்பு)கள் வருமானால், கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்துவிடுவேன். ஆயினும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; (சில நேரங்கüல்) நீங்கள் மறந்துவிடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்துவிடும்போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்; என்று கூறிவிட்டு, “உங்கüல் ஒருவர் தமது தொழுகையில் (எதையேனும் கூடுதலாகச் செய்ததாகவோ குறைத்துவிட்டதாகவோ) சந்தேகிக்கும் போது சரியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் (தொழுகையைப்) பூர்த்தி செய்து சலாம் கொடுத்த பின்னர் (மறதிக்குரிய) இரண்டு சஜ்தாக்கள் செய்யட்டும்” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்பட்டதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது. தொழுகையின் ரக்அத்துகள் நபி (ஸல்) அவர்களுக்கு மறந்து போனதை இது தெளிவுபடுத்துகின்றது. “உங்களைப் போன்ற மனிதன் தான்; உங்களைப் போலவே நானும் மறக்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது.
ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் (எங்கüடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:
யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் (பள்üவாசலுக்கே) திரும்பவும் வரட்டும். ஏனெனில் லைலத்துல் கத்ர் இரவு பற்றி எனக்கு(க் கனவில்) காட்டப்பட்டது; அதை நான் மறக்கடிக்கப்பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்கüல் ஒற்றைப்படையான நாüல் உள்ளது.
இந்த ஹதீஸ் லைலத்துல் கத்ரு மறந்து போனதை விளக்குகின்றது.
இதுபோன்று(புகாரி: 482, 2358, 6967, 7169, 7181, 7185)ஆகிய ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்கள் மனிதர் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி தெரிவிக்கின்றன.
“அல்லாஹ்வே! முஹம்மது மனிதர் தான். மனிதர்கள் கோபப்படுவது போன்றே அவர் கோபப்படுகின்றார். நான் உன்னிடத்தில் ஓர் வாக்குறுதி பெற்றிருக்கிறேன். எனக்கு நீ அதில் மாற்றம் செய்ய மாட்டாய். யாரையாவது ஓர் இறைநம்பிக்கையாளரை நான் நோவினை செய்திருந்தால் அல்லது அவரைத் திட்டியிருந்தால் அல்லது அவரை அடித்திருந்தால் அதை அவருக்கு இறுதிநாளில் (அவரது பாவத்திற்கு) பரிகாரமாகவும், அதைக் கொண்டு அவரை உன்னிடம் நெருங்க வைக்கும் வணக்கமாகவும் ஆக்குவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இந்த ஹதீஸ்கள் தெள்ளத் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் தான் என்று தெரிவிக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் மனிதர் தாம், நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் வஹீ எனும் இறைச் செய்தியாகும் என்பதை மேலே நாம் கண்ட வசனங்களும் ஹதீஸ்களும் இன்னும் ஏராளமான ஆதாரங்களும் உணர்த்துகின்றன.
ஆனால் இந்த பரேலவிச பயங்கரவாதிகள் நபி (ஸல்) அவர்களை மனிதத் தன்மையிலிருந்து உயர்த்தி, இறைத்தன்மைக்குக் கொண்டு செல்கின்றனர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நபி (ஸல்) அவர்கள், “கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) “அல்லாஹ்வின் அடியார்’ என்றும் “அல்லாஹ்வின் தூதர்’ என்றும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
இந்த பயங்கரவாதிகளுக்கு நபி (ஸல்) அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கை எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. இந்த லட்சணத்தில் நாங்கள் நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக மதிக்கிறோம், நேசிக்கிறோம் என்ற வெற்றுப் பேச்சு வேறு!