இறுதி நாளை நம்புதல்
இறுதி நாளை நம்புதல்
திடீரென்று ஏற்படும் அந்த நாள் தொலைவில் இல்லை – 7:185, 17:51, 21:1, 21:97, 33:63, 42:17, 47:18, 54:1, 70:7,
78:40 திடீரென்று கண்மூடித் திறப்பதற்குள் – 6:31, 12:107, 16:77, 21:40, 22:55, 43:66, 47:18
மறுமை எப்போது வரும் என்பதை ஒருவரும் அறிய முடியாது – 7:187, 20:15, 31:34, 33:63, 41:47, 43:85, 79:42,43
ஸூர் ஊதப்படுதல் அழிப்பதற்காக ஸூர் ஊதப்படுதல் – 6:73, 27:87, 36:49, 39:68, 50:20, 69:13-18, 79:6
மீண்டும் உயிர்ப்பிக்க ஸூர் ஊதப்படுதல் – 18:99, 20:102, 23:101, 27:87, 36:51, 36:53, 37:19, 39:68, 50:42, 74:8-10, 78:18, 79:7, 79:13
ஸூர் ஊதப்பட்டதும் இறைவன் நாடியவர்களைத் தவிர வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் மூர்ச்சையாகி விடுவார்கள் – 39:68 அந்நாள் கடுமையானது அனைவரும் இறைவனின் முன்னே நிறுத்தப்படும் நாள் – 2:148, 2:281, 3:9, 3:25, 3:157, 4:87
தலைவர்கள் தொண்டர்களைக் கைவிடும் நாள் – 2:166,167, 10:28, 14:21, 29:25, 34:31,32
செயல்களின் விளைவைக் காணும் நாள் – 3:25, 3:30, 3:115, 3:161, 4:40, 40:17
ஒருவரோடொருவர் முட்டி மோதிக்கொள்ளும் நாள் – 18:99
மரண சாசனம் செய்ய அவகாசம் இருக்காது – 36:50
பிள்ளைகளும், செல்வமும் உதவ முடியாத நாள் – 3:116
வானமும், பூமியும் மாற்றப்படும் நாள் – 14:48
கைசேதப்படும் நாள் – 19:39
பாலூட்டுபவள் தனது குழந்தையை மறக்கும் நாள் – 22:2
மனிதன் தனக்கு எதிராகச் சாட்சி சொல்லும் நாள் – 24:24
எவரும் எவருக்கும் பயனளிக்க முடியாத நாள் – 2:48,123, 2:254, 14:31, 26:88, 43:67, 60:3, 70:10, 80:34,35,36
சில முகங்கள் வெண்மையாகவும், வேறு சில முகங்கள் கறுப்பாகவும் ஆகும் நாள் – 3:106, 10:26, 39:60, 75:22, 80:38, 88:8
உண்மை பயனளிக்கும் நாள் – 5:119
எதையும் மறைக்க முடியாத நாள் – 4:42, 86:9
இறைவனின் அனுமதியின்றி பேச முடியாத நாள் – 11:105, 78:38
பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் நாள் – 14:42, 24:37, 75:7
கர்ப்பிணிப் பெண்ணைப் பிரசவிக்கச் செய்யும் நாள் – 22:2
போதையுடையோராக மாற்றி விடும் நாள் – 22:2
இதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும் நாள் – 40:18
சிறுவர்களின் தலை முடியும் நரைக்கும் நாள் – 73:17
மலக்குகள் அணிவகுத்து நிற்கும் நாள் – 78:38
உற்றார் உறவினரை விட்டு ஓடும் நாள் – 6:94, 16:111, 19:80, 19:95, 23:101, 28:66, 31:33, 35:18, 60:3, 75:10, 80:34,
82:19 மனிதர்கள் ஈசல்கள் போல் வீசப்படும் நாள் – 101:4
தீயோர் நீலநிறக் கண்களுடையவர்களாக எழுப்பப்படும் நாள் – 20:102
மிருகங்களும் எழுப்பப்படும் நாள் – 6:38, 81:5 ஜின்களும் எழுப்பப்படும் நாள் – 6:128-130
ஷைத்தான்களும் எழுப்பப்படும் நாள் – 19:68
காலோடு கால் பின்னிக் கொள்ளும் நாள் – 75:29,30
கியாமத் நாளின் அடையாளங்கள் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரின் வருகை – 18:94, 21:96
மனிதர்களை மூடிக் கொள்ளும் புகை மண்டலம் உருவாகுதல் – 44:10
இறை வசனங்களை நம்பாதோரை இனங்காட்டிப் பேசுகின்ற பிராணி – 27:82
ஈஸா நபியின் வருகை – 43:61, 3:55, 3:144, 4:159, 5:75, 5:110, 5:116, 19:30,31
கியாமத் நாளின் ஆரம்ப நிகழ்வுகள் வானம் சுருட்டப்பட்டு விடும் – 21:104, 52:9, 55:37, 69:16, 70:8, 78:19
மலைகள் பூமியுடன் சேர்த்து தூக்கி எறியப்படும். பின்னர் ஒன்றோடு ஒன்று மோதித் தூள் தூளாகி விடும் – 18:47, 20:105, 52:10, 56:5,6, 69:14, 70:9, 73:14, 77:10, 78:20, 81:3, 101:5
சந்திரன் ஒளி மங்கியதாக மாறிவிடும். சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் – 75:8,9, 77:7, 81:1,2, 82:2
பூமி வெட்ட வெளியாகி விடும் – 18:47, 56:4, 69:14, 73:14, 84:5, 89:21, 99:1-4
கடல்கள் தீ மூட்டப்படும் – 81:6
கடல்கள் பொங்கி தடுப்புகள் அகற்றப்படும் – 82:3
வேறு பூமியாக மாற்றி அதில்தான் சொர்க்கம் நரகம் – 14:48, 21:104, 39:67
வானம் வேறு வானமாக மாற்றப்படும் – 14:48
எழுப்பப்பட்டு ஒன்று திரட்டப்படுதல் படைக்கப்படும்போது இருந்த கோலத்திலேயே எழுப்பப்படுவார்கள் – 7:29, 18:48, 21:104
எழுப்பப்பட்டதும் பூமியில் சில நிமிடங்கள் மட்டுமே வாழ்ந்தோம் என்று எண்ணுவார்கள் – 10:45
தீயோர் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள் – 17:72, 17:97, 20:124
மெதுமெதுவாக அடியெடுத்து வைத்துச் செல்வார்கள். இறைவனுக்கு அடங்கி ஒடுங்கிச் செல்வார்கள் – 20:108
மண்ணறைகளிருந்து வேகமாக இறைவனை நோக்கி வெளியேறுவார்கள் – 36:51
தலைவர்களுடன் அழைக்கப்படுவர் – 17:71
எரித்துக் கடலில் கரைக்கப்பட்டவர்களும், மிருகங்களால் சாப்பிடப்பட்டவர்களும் எழுப்பப்படுவார்கள் – 2:148, 3:157, 4:87
இறைவனுக்கு எளிதானது முதலில் படைத்தவனுக்கு மீண்டும் படைத்தல் எளிதானது – 2:27, 17:49-51, 29:20, 30:27, 31:28, 36:79
வானங்கள் பூமியை விட மனிதனைப் படைத்தல் எளிதானது – 36:81, 40:57, 79:27
செயல்களின் ஏடுகள் செயல்களின் ஏடுகள் – 3:30, 10:61, 17:13, 17:14, 17:71, 18:49, 18:50, 23:62, 39:69, 45:24, 45:28, 45:29, 69:19, 69:25, 84:7, 84:10
விசாரணை கைகளும், கால்களும், தோல்களும், செவிப் புலன்களும், பார்வைகளும் பேசும் – 24:24, 36:65, 41:20
பரிந்துரை பரிந்துரையே இல்லை என்ற கருத்தைத் தரும் வசனங்கள் – 2:48, 2:123, 2:254, 6:51, 6:70, 6:94, 7:53, 10:18, 30:13, 32:4, 36:23, 39:43, 39:44, 40:18, 74:48
அனுமதி பெற்று பரிந்துரை செய்யலாம் எனக் கூறும் வசனங்கள் – 2:255, 10:3, 19:87, 20:109, 21:28, 34:23, 43:86, 53:26
மறுமையில் வக்கீல் இல்லை மறுமையில் வக்கீல் இல்லை – 11:105, 16:111, 23:108, 36:65, 78:38
மதிப்பீடு செய்தல் – மீஸான் மறுமையில் மதிப்பீடு செய்தல் – 7:8,9, 18:105, 21:47, 23:102, 23:103, 101:6, 101:8
எவரும் எவரது சுமையையும் சுமக்க மாட்டார் ஒவ்வொருவனும் தனது சுமையைச் சுமந்தாக வேண்டும் – 2:134, 2:141, 2:286, 4:111, 6:31, 24:11
பிறரை வழிகெடுத்தால் அந்தச் சுமையையும் சுமக்க வேண்டும் – 16:25
ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் – 2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 35:18, 39:7, 39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 53:38, 74:38
மண்ணறை வாழ்வு மண்ணறை வாழ்வு – 6:93, 36:51, 40:46
நன்மைக்குப் பத்து, தீமைக்கு ஒன்று நன்மைக்குப் பத்து, தீமைக்கு ஒன்று – 2:272, 2:281, 3:25, 3:57, 3:161, 3:182, 4:40, 4:49, 4:124, 6:120, 6:160, 7:147, 8:60, 10:47, 10:54, 16:111, 17:71, 18:49, 21:47
சொர்க்கச் சோலைகள் இந்தப் பூமியும், வானமும் இருக்காது – 14:48
ஏழு வானங்கள் மற்றும் பூமி அளவுக்கு சொர்க்கம் விசாலமானது – 3:133, 57:21
சொர்க்கத்திற்குக் கதவுகள் இருக்கும் -38:50 சொர்க்கச் சோலைகளின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும் – 2:25, 3:15, 3:136, 3:195, 3:198, 4:13, 4:57, 4:122, 5:12, 5:85, 5:119, 7:43, 9:89, 10:9, 14:23, 20:76, 22:14, 22:23, 23:10, 57:12
அழகான குடியிருப்புகளும் உண்டு – 9:72, 13:29, 39:20, 61:12
நல்லோர்களில் பல படித்தரங்கள் உள்ளன – 4:95, 57:10
வானவர்கள் வாழ்த்துக் கூறி அழைத்துச் செல்வார்கள் – 39:73
நல்ல சந்ததிகள் பெற்றோருடன் சேர்க்கப்படுவார்கள் – 52:21
பெண்களுக்கும் சொர்க்கம் உண்டு. அவர்களுக்கு அநீதி இழைக்கப்படாது – 3:195, 4:124, 16:97, 33:35, 40:40
அங்கே இறைவனைக் காண்பார்கள் – 2:46, 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, 83:15
தூய்மையான துணைகள் – 2:25, 3:15, 4:57, 37:48,49, 38:52, 44:54, 52:20, 55:56,57, 55:70,-84, 56:22,23, 56:35, 78:32
துணைகளுடன் கட்டில்களில் சயனிப்பார்கள் – 36:56, 52:20, 83:23
சொகுசுக் கட்டில்களில் இருப்பார்கள் – 15:47, 18:31, 36:56, 37:44, 52:20, 55:76, 56:15, 76:13, 83:23, 83:35
கருத்தவர்களும் அங்கே வெண்மையாகத் திகழ்வார்கள் – 3:106, 3:107, 10:26 வெயில் தெரியாது – 4:57, 13:35, 20:119, 36:56, 56:30, 76:13, 76:14, 77:41
கடும் குளிரும் இராது – 76:13
மிகச் சிறந்தவர்களின் தோழமையும் உண்டு – 4:69
கள்ளம் கபடம் யாருக்கும் இருக்காது – 7:43, 15:47
எவராலும் எத்தகைய இழிவும் ஏற்படாது – 10:26
நல்ல பெற்றோரையும், சந்ததிகளையும் அடிக்கடி சந்திப்பார்கள் – 13:23
ஆண்களுக்குக் கிடைப்பவை பெண்களுக்கும் உண்டு – 3:195, 4:124, 16:97, 33:35, 40:40
ஸலாம் கூறிக் கொள்வார்கள் – 14:23, 19:62, 25:75, 33:44, 54:26, 56:26
எந்தக் கஷ்டமும் இருக்காது – 15:48, 35:35
வெளியேற்றப்பட மாட்டார்கள் – 2:25, 2:82, 3:107, 3:136, 4:13, 4:122, 5:85, 7:42, 9:22, 9:89, 9:100, 10:26, 11:23, 11:108, 14:23, 15:48, 20:76, 23:11, 25:15, 25:16, 46:16, 50:34
நீரூற்றுக்களும் உள்ளன – 15:45, 44:52, 51:15, 55:50, 55:66, 76:6, 76:18, 77:41, 83:28, 88:12
நினைத்தவை யாவும் கிடைக்கும் – 16:31, 21:102, 25:16, 36:57, 41:31, 42:22, 43:71, 44:55, 50:35, 77:42
அங்கிருந்து வேறிடம் செல்ல விரும்ப மாட்டார்கள் – 18:108
வீண் பேச்சுக்கள் இருக்காது – 19:62, 56:25, 78:35, 88:11
நிர்வாணம் இருக்காது – 20:118
ஆபரணங்களும் உண்டு – 18:31, 22:23, 35:33, 76:21
பட்டாடைகளும் உண்டு – 18:31, 22:23, 35:33, 44:53, 55:54, 76:12, 76:21
மாளிகைகளும் உண்டு – 9:72, 25:10, 39:20, 61:12
பகல் தூக்கம் உண்டு – 25:24
தோட்டத்தின் உச்சியில் குடியிருப்பார்கள் – 25:75, 34:37, 39:20, 69:22, 88:10
இன்பத்தில் திளைப்பார்கள் – 36:55, 43:71
அங்கே மரணம் இல்லை – 20:74, 35:36, 44:56, 87:13
பணி செய்யும் வேலையாள்களாக சிறுவர்கள் – 52:24, 56:17, 76:19
அவர்களின் முன்னேயும் வலப்புறமும் ஒளி வீசும் – 57:12, 57:13, 57:19, 66:8
அங்கே தனி ராஜ்ஜியம் – 76:20
மலர்ந்த முகம் – 75:22, 80:38, 83:24, 88:8
சாய்ந்து கொள்ளும் திண்டுகளும் உள்ளன – 88:15
உயர்தரமான விரிப்புகள் உள்ளன – 55:54, 55:76, 56:34, 88:16
இரண்டு வகை சொர்க்கம் – 55:46-53, 55:62 சொர்க்கத்தில் உணவு பசி இருக்காது – 20:118
பட்டினியில்லாத வகையில் உணவு – 13:35
தாகம் இருக்காது – 20:119
மாமிச உணவும் உண்டு – 52:22, 56:21
நாற்றமில்லாத ஆற்று நீர், பாலாறு, தேனாறு, மதுவாறு அனைத்தும் உண்டு – 47:15
அனைத்து வகைக் கனிகளும் உண்டு – 47:15
அதிகமான அளவு சாப்பிடுவார்கள் – 38:51, 43:73
இரு வேளை உணவு – 19:62
தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உண்பார்கள் – 43:71, 76:15
வெண்மையான, சுவையான மது பரிமாறப்படும். அதில் போதை இருக்காது – 37:45-48, 52:23, 56:18,19 83:25-28
ஏற்கனவே சாப்பிட்ட கனிகள் வடிவத்திலேயே கனிகள் உணவாக அளிக்கப்படும் – 2:25, 36:57, 37:42, 52:22, 55:68, 78:32
விரும்பிய கனிகளைப் பெறலாம் – 56:20
கனிகள் கைக்கெட்டும் உயரத்தில் தொங்கும் – 69:23, 76:14
கற்பூர பானம் – 76:5
இஞ்சி பானம் – 76:17
நரகம் அனைவரும் நரகைக் கடக்க வேண்டும் – 19:71
நரகின் எரிபொருட்கள் யாவை – 2:24, 21:98, 40:72, 72:15
நரகில் பல படித்தரங்கள் – 4:145
வெளியேற முடியாது – 5:37, 32:20
நரகத்திற்கு ஏழு வாசல்கள் உள்ளன – 15:44
தீய வழிகாட்டிய தலைவர்களும், வழிகாட்டப்பட்டவர்களும் சண்டையிட்டுக் கொள்வர் – 7:38, 7:39, 26:96-102, 33:66-68, 38:60-63, 40:47-48
நரகத்தில் உணவு கொதிக்கும் நீர் புகட்டப்படும் – 6:70, 10:4, 37:67, 38:57, 47:15, 55:44, 56:42, 56:54, 56:93, 78:25, 88:5 சீழ் புகட்டப்படும் – 14:16,17, 38:57, 69:36, 78:25
கொதிக்கும் நீரால் குடல் துண்டாகும் – 47:15
உருக்கப்பட்ட செம்பு போல் வெப்பமுடைய தண்ணீர் புகட்டப்படுவர் – 18:29
ஸக்கூம் மரமே உணவாகும் – 37:66, 44:43-46, 56:52,53
தொண்டைக்குள் இறங்காத உணவு தோலைக் கருகச் செய்யும் – 73:13, 74:29
முள்மரமே உணவாகும் – 88:6
பசியைப் போக்காத உணவு – 88:7
பல் வகைத் தண்டனைகள் கருகும் தோல்கள் உடனே மாற்றப்படும் – 4:56
நெருப்பினால் ஆன ஆடை – 22:19
கொதிநீர் தலையில் ஊற்றப்படும் – 22:19, 44:48
நெருப்பினால் எரிக்கப்படுவர் – 40:72
நெருப்புக் காற்று வீசும் – 56:42
விலங்கிடப்படுவார்கள் – 13:5, 34:33, 36:8, 40:71, 69:32, 73:12, 76:4
நெருப்பால் விரிப்பு – 7:41
நெருப்பால் போர்வை – 7:41
பழுக்கக் காய்ச்சி சூடு போடப்படும் – 9:35
நெருப்பின் வேகம் தணியும்போது உடனே அதிகரிக்கப்படும் – 17:97
நரகத்தில் மரணம் இருக்காது – 14:17, 20:74, 35:36, 44:56, 78:13, 87:13
நரகம் கடுமையான வெப்பமுடையது – 9:81
நரகவாசிகளின் கூச்சலும், அலறலும் – 11:106, 21:100
இரும்புச் சம்மட்டியால் அடிக்கப்படுவார்கள் – 22:21
முகத்தை எரிக்கும் நெருப்பு – 23:104
நரகத்தின் பேரிரைச்சல் – 25:12, 67:7
நரகில் புரட்டி புரட்டிப் போடப்படுவார்கள் – 26:94, 33:66
கீழ்ப்புறத்திலிந்தும், மேற்புறத்திலிருந்தும் வேதனை செய்யப்படும் – 29:55
வேதனை இலேசாக்கப்படாது – 40:49, 43:75
கரும் புகையே நிழலாகும் – 56:43-44
கடுமையான காவலர்கள் – 66:6, 74:31
மண்டை ஓட்டைக் கழற்றும் வெப்பம் – 70:16
மாளிகை போல் பிரம்மாண்டமான தீப்பந்தங்களை வீசி எறியும் – 77:31-34
குளிர்ச்சியை அனுபவிக்க மாட்டார்கள் – 78:24
இதயங்களைத் தாக்கும் கடும் நெருப்பு – 104:6,7
என்றென்றும் நரகில் கிடப்போர் இறைவனை நம்ப மறுத்தவர்கள் – 2:39, 2:161,162, 2:217, 2:257, 3:116, 4:169, 9:68, 33:65, 39:72, 40:76, 41:28, 59:16, 64:10, 98:6
ஒரு நன்மையும் செய்யாது தீமைகளை மட்டுமே செய்தவர்கள் – 2:81, 10:27, 16:29, 43:74
வட்டி வாங்கியவர்கள் – 2:275
ஏகஇறைவனை ஏற்று பிறகு மறுத்தவர்கள் – 3:88
அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகள் அனைத்தையும் மீறியவர்கள் – 4:14, 5:80, 72:23
சத்தியம் செய்வதைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் – 58:16
கொலை செய்தவர்கள் – 4:93
இறை வசனங்களை நம்ப மறுத்துப் புறக்கணித்தவர்கள் – 7:36, 20:100, 23:103
இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் – 6:128, 9:17, 25:68, 40:76, 98:6
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிடுவோர் – 9:63
இரட்டை வேடம் போடும் நயவஞ்சகர்கள் – 9:68 மறுமையை நம்பாதவர்கள் – 10:52, 13:5, 22:14
தடுப்புச் சுவர் இடைநிலையில் சிலர் – 7:46