108) இறந்தவரை ஏசக் கூடாது
நூல்கள்:
ஜனாஸாவின் சட்டங்கள்
ஒருவர் மரணித்து விட்டால் அவரைப் பற்றி நல்லதாகக் கூற முடிந்தால் அவ்வாறு கூற வேண்டும். நல்லதாகக் கூறுவதற்கு ஏதும் இல்லாவிட்டால் வாய் மூடிக் கொள்ள வேண்டும். ஏசுவதற்கு அனுமதி இல்லை.
‘இறந்தவர்களை நீங்கள் ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் செய்ததை (அதன் பயனை) அவர்கள் அடைந்து விட்டனர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
‘இறந்தவரை ஏசி உயிருடன் உள்ளவர்களை வேதனைப்படுத்தாதீர்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)