088. இரவு மினாவில் திக்ரு போன்றவைகளில் ஈடுபடுவது சுன்னத்தா?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
அரஃபாவுக்கு முந்திய அன்று (8ஆம் நாள் முடிந்த) இரவு மினாவில் துஆ, திக்ரு போன்றவைகளில் ஈடுபடுவது சுன்னத்தா? தூங்கி விடுவது தான் சுன்னத்தா?
பதில்
மினாவில் துஆ, திக்ரு போன்றவை செய்ததாக எந்த ஹதீசும் இல்லை. எனவே சுன்னத்தான திக்ரு, துஆ போன்றவை இல்லை.
எனினும், இந்த நேரத்தில் இன்ன திக்ரு ஓத வேண்டும் என்று நபியவர்கள் காட்டித்தந்த இடங்களைத் தவிர, ”சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்” போன்ற பொதுவான திக்ருகளை எந்த நேரத்திலும் சொல்லலாம். துஆவும் செய்யலாம். தடையில்லை.