04) இரவு தொழுகை சட்ட சுருக்கம்

நூல்கள்: சட்டங்களின் சுருக்கம்

  • ரமளான் மற்றும் அனைத்து இரவுகளிலும்  தொழப்படும் சுன்னத்தான தொழுகையே இரவுத் தொழுகை எனப்படும்.
  • பல்வேறு பெயர்கள் – 1) ஸலாத்துல் லைல் 2) கியாமுல் லைல் 3)  தஹஜ்ஜுத் 4) வித்ர்
  • தராவீஹ் என்ற பெயர் ஹதீஸில் இல்லை.
  • ரமளான் இரவுத் தொழுகையினால் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்
  • ஆரம்ப நேரம் இஷாவிற்கு பின்னிலிருந்து
  • இறுதி நேரம் பஜ்ர் வரை
  • எனினும், வித்ரை மட்டும் பஜ்ருக்கு பின்னரும் தொழலாம்
  • இரவுத்தொழுகை தொழாவிடில், பகலில் 12 ரகஅத் தொழலாம்
  • எண்ணிக்கை,
    4+5 வித்ர்,
    8+3 வித்ர், 8+5 வித்ர்,
    10+1 வித்ர், 10 ரகஅத் மட்டும் (வித்ர் இல்லை),
    12+1 வித்ர்,
    வித்ர் சேர்த்து 7
    வித்ர் சேர்த்து 9
    வித்ர் சேர்த்து 11
    ஆக அடிப்படையில் தொழவது சுன்னத்
  • வித்ர் என்பது ஒற்றைப்படை தொழுகை
  • வித்ர் எண்ணிக்கை 1, 3, 5 அல்லது அதிகபட்சம் 7
  • 5 அல்லது 7 ஆக இருப்பின் கடைசி முந்தைய ரகஅத்தில் உட்காரலாம்
  • வித்ர் தொழுகையில் கடைசி ரகஅத்தில் மட்டுமே ஸலாம் கொடுக்க வேண்டும்.
  • அல்லாஹும்மஹ்தினீ என்ற குனூத்தை ருகூவிற்கு முன் (அ) பின் ஓதவேண்டும்.
  • 20 ரக்அத், 41 ரக்அத்களுக்கு ஆதாரமில்லை.
  • உமர்(ரலி) 20 ரகஅத் தொழ கட்டளையிட்டார்கள் என்ற ஹதீஸ் ளயீஃபானது.
  • ஸஹீஹாக இருந்தாலுமே, உமரை பின்பற்ற நமக்கு கட்டளை இல்லை.
  • தனிப்பட்ட முறையில் ஒருவர் விரும்பினால் அதிகமாக நஃபிலாக தொழலாம்.
  • கூட்டாக சுன்னத் அல்லாத, குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழமையாக தொழக்கூடாது.
  • குர்ஆன் முழுவதையும் ஓதி முடிக்கவேண்டும் என்பது பித்அத்.
  • ஜமாஅத்ஆக தொழுவதை விட தனித்து தொழுவதே சிறந்தது.
  • மக்காவில் 20 ரக்அத் தொழுவதை பின்பற்றுமாறு இறைவன் கூறவில்லை.
  • 4 ரக்அத் முடிவில் சில திக்ருகளை கூறுவது பித்அத்.
  • நிற்க இயலாவிடில் உட்கார்ந்து தொழலாம்.