இரவில் வாகிஆ ஓதினால் ஒரு போதும் வறுமை ஏற்படாது
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : பைஹகீ 2392
மேற்கண்ட செய்தியை ஆதாரமாகக் கொண்டு தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதும் வழக்கம் சிலரிடம் உள்ளது. ஆனால் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல.
இச்செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும்.
இந்த செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து
அபூ ளப்யா என்பவரும்
அபூ ளப்யாவிடமிருந்து அபூ ஷுஜாஉ என்பவரும்
அறிவிக்கின்றனர்.
இவ்விரு அறிவிப்பாளர்களும் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படாத முகவரி அற்றவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.