இரவின் இறுதியில் தொழுவது சிறந்ததா?
கேள்வி-பதில்:
தொழுகை
இரவின் இறுதியில் தொழுவது சிறந்ததா?
ஆம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சுபிட்சமும் உயர்வும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலொரு பகுதி நீடிக்கும் போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுகிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (1145)
எனவே, இரவுத்தொழுகையை இரவில் இறுதியில் தொழுவது, துஆ கேட்பது சிறந்தது.